பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி. .

1939 ம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தொடங் கியது. யுத்தத்தை ஆதரிப்பது, யுத்தத்திற்கு ஒத்துழைப்பது பற்றி காங்கிரஸ் தலைமைக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தங்களைக் கேட்கிாமல்,தங்கள் சம்மதம் பெறாமல் பிரிட்டிஷ் வைசிராய் இந்தியாவையும் போர்ப்பிரகடனத்தில் ஈடுபடுத்தி விட்டார் என்னும் காரணத்தை வைத்து எல்லா மாகாணங்களிலும் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜினாமா செய்துவிட்டன.

இந்தியாவை இந்திய மக்களுடைய சம்மதமில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் யுத்தத்தில்_ ஈடுபடுத்தியதற்கு இந்தியாவில் இருந்த முக்கிய அரசியல் கட்சிகளிடம் எதிர்ப்பு இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்துக்கொள்ளும் வகை யில் தனிநபர் சத்தியாக்ரகம் நடத்தினார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி தீவி சமான யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பல நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ார்கள். 1940ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது சென்னை சதிவழக்கு, நெல்லை சதிவழக்கு,கோவை சதிவழக்கு என் னும் பெயரில்” மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னராட்சியைக் கவிழ்ப்பதற்குச்சதி செய்ததாக வழக்குத் தொடுத்தார்கள். கடும் தண்டனை விதித்த ர்கள். காங்கி ஸ்காரர்கள் பலரும் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார்கள்.

1941-ஜூன் மாதம்தாஜி ஜெர்மனியின் படைகள் சோவியத் யூனியன் மீது படையெடுத்தன. சோவியத் யூனியன் போரில் ஈடுபட்டது.

ஜெர்மனியும் இத்தாலியும் ஜப்பானும் சேர்ந்து உலகை முழுவதும் கைப்பற்றி பங்கு போட்டுக் கொள்ள போரில் தீவிரமாக இறங்கின. ஜெர்மனி ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றிக் கொண்டு சோவியத் நாட்டின் மீது படை யெடுத்தது. சோவியத் யூனியன் முழுவதையும் கைப்பற்றி அராபிய நாடுகளைப் பிடித்து இந்தியாவையும் பிடிக்க திட்டம் போட்டது. இத்தாலி மத்தியதரைக்கடல் பகுதியை யும் ஆப்பிரிக்காவையும் கைப்பற்றத் திட்டமிட டிருந்தது. ஜப்பான் தென்கிழக்கு ஆசியா முழுவதையும் கைப்பற்றி அமெரிக்காவையும் பிடிக்க நினைத்திருந்தது. நாடு முழுவதும் ஒரு மனிதனைப் போல் திரண்டு எழுந்து நாஜிப் படைகளை எதிர்த்தது, சோவியத் யூனியன். நாஜி ஆக்கிர மிப்பில் சிக்குண்ட ஐரோப்பிய நாடுகளின் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ப. சிச ஆக்கிரமிப்பை எதிர்த்து விடுதலைப் போரைத் தொடங்கினார்கள்.