பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

பெற்றவுடன் கிராமப்புற சமுதாய முறையில், நிலப்பிரபுத் துவ சமூகப் பொருளாதார முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

முதலாவதாக இந்திய நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் ஆதிக்கம் கொண்டிருந்த சுதேசி மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, அந்த சமஸ்தானங்கள் கலைக்கப் ட்டன. அந்த நிலப்பகுதிகள் அனைத்தும் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.

இந்திய சுதந்திரச் சட்டம் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது இந்த சமஸ்தானங்கள் அவர்கள் இஷ்டப்படி இந்திய யூனியனுடனோ, பாகிஸ்தானுடனோ சேர்ந்து கொள்ளலாம், அல்லது சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டு தனியாகவும் இருந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜானகாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணையப் போவதாக அந்த நவாப் அறிவித்தார். ஆனால் அந்த மக்கள் ஒன்று திரண்டு நவாபை விரட்டி விட்டு சமஸ்தானத்தை இந்தியாவுடன் சேர்த்தார்கள். அதே போல ஹைதராபாத் நிஜாம் தனியாக சுதந்திரப் பிரகடனம் செய்தார். அதை எதிர்த்து அந்த சமஸ்தான மக்கள் திரண்டார்கள்.

இந்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுத்தது. ஐதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதே போல் முந்நூறுக்கும் அதிகமான சமஸ்தானங்களும் இந்திய அரசில் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் படிப் படியாக இந்த சமஸ்தான மன்னர்களின் அதிகாரங்களும் இதர சலுகைகளும் நீக்கப்பட்டன. சமஸ்தானப் பகுதிகளும் உடைக்கப்பட்டு மொழிவழி மாநில அமைப்பில் இணைக்கப் பட்டன.

இவ்வாறு பழைய சமஸ்தானங்களில் இருந்த மக்கள் எல்லாம் இந்தியக் குடியரசின் நேரடியான ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டார்கள்.

உதாரணமாக தமிழக மக்கள் சென்னை ராஜதானி-அல்லது சென்னை மாகாண்ம் திருவாங் கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகா, ஆகியவைகளிலும் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய பகுதிகளிலும் பிரிந்து இருந்தார்கள். இப்போது ஒன்று பட்டு ஒரே மாநில நிர்வாகத்தின் கீழ் உள்ளார்கள். ஆந்திரப் பிரதேச மக்கள் சென்னை மாகாணம், ஐதராபாத் சமஸ் தானம் ஆகியவற்றில் பிரிந்திருந்தார்கள். அதேபோல் கேரள மக்கள் திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், சென்னை மாகாணம் ஆகியவற்றில் பிரிந்து இருந்தார்கள்.