பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 O கிராமப்புற பாட்டாளிகளை நோக்கி . .

முறைகளும், ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட புதிய வகைப் புல்லுருவிகளும் பெரும்பாலான அதன் மிச்ச சொச்சங்களும் ஒழிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் நிலப்பிரபுத்துவ முறையை முற் )/L: 55 ஒழிக்கவில்லை. விவசாயிகளின் புதிய # :) வழி வகுக்கவில்லை. ஆயினும் இந்த மாற்றங்கள் கிராமப் புறங்களில் முதலாளித்துவ உற்பத்தி உறவு வளருவதற்கான பக்குவ நிலையை, சாதகமான சூழ்நிலையை உண்டாக்கியது.

இப்போது அரசாங்கத்தின் கீழ் நேரடியாக வரி செலுத்தும் நிலவுடமையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆயினும் ரயத்துவாரி முறையில் ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள நிலச்சுவான்தார்கள் நீடித்தார்கள். இன்னும் நீடிக்கிறார்கள். இந்தச்சிறிய பெரிய நிலச்சுவான்தார்களின் கீழ் சாகுபடியாளர்கள் மட்டும் தமிழகத்தில் இன்னும் சுமார் 24 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 4 லட்சம் பேர்கள் தான் சட்டப்படி பதிவு செய்யப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்னையும் ரயத் துவாரி முறையின் கீழ் உள்ள இன்னும் நீடிக்கிற நிலக்குவிய லும் முக்கியமானதாகும். இந்தப்பகுதி விவசாயிகள் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர்களின் முக்கிய பகுதியாகும். இந்தப்பகுதியில் திருத்தங்கள் கொண்டு வருவ தற்கும் அரசு சில சட்டங்கங் கொண்டு வந்துள்ளது. அவை வாரம், குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டங்களாகும்

வாரம் குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டத்தின் முக்கிய அம்சம் ஒருசாகுபடியாளரை அவர் சாகுபடி செய்துவந்த நிலத்திலிருந்து வெளியேற்றக்கூடாது என்பதாகும். இதன் மூலம் சாகுபடியாளருக்கு நிலவெளியேற்றத்திலிருந்து பாதுகாப்பு கிடைத்தது. இது விவசாயிகள், சாகுபடியாளர் கள் தங்களுடைய நீண்ட போராட்டங்களின் மூலம் கிடைத்த மிகப்பெரிய உரிமைகளில் ஒன்றாகும்.

இரண்டாவது, நியாய வாரச்சட்டம், இதன் மூலம் தமிழகத்தில் இப்போது சாகுபடியாளர்களுக்கு கண்டு முதலில் 75 சதவீதம் கிடைக்கும். நிலச்சொந்தக்காரர் களுக்கு 25 சதவீதம் கிடைக்கும். நியாயவாரம் கேட்டு வாரம் குத்தகை விவசாயிகள் நீண்ட நெடும் போராட்டங் கள் நடத்தியிருக்கிறார்கள்.

இந்தியநாட்டில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் ஆறில் ஒரு பங்கு அரச பாகமாக வாங்குவது பண்டைய அரசர் களின் வரிமுறையாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆறில் ஒருபாகம் வாங்குவதுதான் செங்கோல் மன்னன் கடமை யாகும். ஆனால் சில நல்ல மன்னர்கள் பத்தில் ஒருபாகம்