பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 63

நீரில் இயற்கையாக வளரும் மீன்பாசியும், நீர் வற்றியபின் கண்மாய் உள்வாய் நிலத்தில் வளரும் பசும்தழையும் கூட அந்த பிராமணக் குடும்பங்களுக்கு மட்டுமேஎப்படிச்சொந்த மாயிற்று என்பது ஒருபுதினாகும். அது பற்றிப் பலகதைகள் கூறப்படுகின்றன.

அது எப்படியிருப்பினும் அந்தக் கண்மாய்ப் பாசன நில மெல்லாம் பெரும்பாலும் பிராமண நிலச்சுவான்தாரர் களுக்கு ரயத்துவாரி முறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களிடமிருந்து பட்டா இருந்தது. மற்றவர்களுக்கும் சில இடங்களில் கொஞ்சம் இருந்தது.

பிராமண நிலச்சுவான்தாரர்கள் தங்கள் நிலத்தில் நேரடி யாக சாகு படி செய்யவில்லை. அந்நிலங்களில் மற்றவர்கள் தான் அதிகமாக சாகுபடி செய்து வந்தார்கள். இந்த சாகு படியாளர்களுக்கு அவர்கள் சாகுபடி செய்து வந்த நிலத் தின் மீது எந்த உரிமையும் இல்லாமல் இருந்தார்கள். நிலச் சுவான்த ரரின் இஷ் த்திற்கு தனது சாகுபடியாளரை வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு ஒருவருக்கு மாற்றி விடலாம். சாதாரணமாக மூன்றில் இரண்டு பங்கு நிலச் சுவான்தாருக்கும் மூன்றில் ஒரு பங்கு சாகுபடியாளருக்கும், செலவு சாகுபடியாளர் பொறுப்பிலும் இருந்தது. கண்டு முதலில் மூன்றில் இரண்டு பங்கு நிலச்சுவான்தாரருக்கு அளந்து கொட்டி விட்டு, பாக்கி சில்லறை அளப்புகளை முடித்து, அறுவடைக் கூலி கொடுத்து முடித்து மீதமிருக்கும் கொஞ்சம் நெல்லும் வைக்கோலும் சாகுபடி செய்தவருக்குக் கிடைத்தது. இந்தக் கொடுமையை விவசாயிகள் அவ்வப் போது தனிப்பட்ட முறையில் எதிர்த்துத் தோல்வியே கண்டார்கள். நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாக சில ஊர்ப் பிரமுகர்கள், மற்றும் அரசாங்கமும் அதிகாரிகளும் இருந்தார்கள். நிலச்சுவான்தாரர்களுக்கு அடியாட்களும் இருந்தார்கள்.

இந்த வட்டாரத்தில் 1942 ஆம் ஆண்டில் அகில இந்திய கிசான் சபையின் கீழ் அதன் கிளையாக வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள் சங்கம்’ என்னும் பெயரில் விவசாயி கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விவசாயிகள் சங்கம் 1943, 1944ஆம் ஆண்டுகளில் மக்களிடம், குறிப்பாக சாகுபடியாளர்களிடம் நன்கு அறிமுக மாயிற்று. சாகுபடியாளர்களுக்கு சுத்தவாரம் வேண்டும் என்னும் கோரிக்கை வைத்து கிளர்ச்சியும் பிரச்சாரமும் நடைபெற்றது.

இாண் ாவது உலகப்போர் முடிந்தது. முதல் முழக்கமாக 1945ஆம் ஆண்டில் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள்