பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி. .

சுத்தவாரம் வேண்டும் என்னும் நியாய வாரக்குரலைக் கிளப்பினார்கள். போராட்டம் சூடுபிடித்து முக்கிய கிராமங் களுக்குப்பரவியது. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் செங்கொடிவிவசாயிகள் சங்கத்தின் கீழ் திரண்டார்கள். இயக்கத்தின் வலுவைக் கண்டு நிலச்சுவான்தாரர்கள் சமரச உடன்பாட்டிற்கு வந்தார்கள். அந்த உடன்பாடு உதவி கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது. விவசாயி களின் பிரதிநிதிகள் சுத்த வாரம் என்று கூறிய போது பாதி வாரம் என்றால் புரிகிறது. சுத்தவாரம் என்றால் என்ன பொருள் என்று உதவி கலெக்டர் கேட்டார். எந்த விதமான சில்லறை அளப்புகள் இல்லாமல் கூலி பொதுவில் போட்டு மீதமுள்ள கண்டு முதலில் நிலச்சுவானு ப சாகுபடி யாளரும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வது என்று விவாதிக்கப்பட்டது. சில்லறை அளப்புகள் என்பவை எவை?

போர் அடித்து நெல் குவியல் போட்ட பின்னர்-காற்றுக்கு விட்டுத்துாற்றி அம்பாரமாக்கிய பின்னர். மொத்தம் வந்த நெல்லை மூன்று பங்காகப் பிரித்து அதில் இரண்டு பங்கை நிலச்சுவான் தாருக்கு ஒதுக்கிவிட்டு, பாக்கியுள்ள ஒரு பங்கில் முதலில் கூலி அதாவது அறுவடை அடிப்புக்கூலிஅளந்துவிட வேண்டும் அதன்பின்னர், முதலில் சாமிகுறுணி என்னும்பெய ரில் ஒரு மரக்கால் (பழைய பட்டணம் படிக்கு நா லுபடி ஏறத்தாழ ஆறுலிட்டர் அளவுக்குசற்று அதிகமாக இருக்கும்.:) ரண்டாவதாக, களத்திற்கு நிலச்சுவான்தார் தனது பிர நிதியை அனுப்பியிருப்பார். அதற்கு கங்காணம் என்று பெயர். அவருக்குக்கங்கான அளப்பு என்னும் பெயரில் மூன்று மரக்கால் கொடுக்க வேண்டும். மூன்றாவது நிலச் சுவான்தாருக்கு இளைப்பு என்னும் பெயரில் இரண்டு மரக்கால், தவிப்பு என்னும் பெயரில் இரண்டு மரக் கால் நெல் (அதாவது நிலச்சுவான்தாரின் பிரதிநிதி கங்கான மாக வந்திருப்பவர், களத்திற்கு வந்து இளைத்துப்போ ப் விடுவார் என்றும் அதற்கு ஈடுகட்ட இரண்டு மரக்கால் நெல்லும், தவித்துப் போய் விடுகிறார் என்பதற்காக இரண்டு மரக்கால் நெல்லும் அளந்து விடுவதுஎன்பதாகும்.) நான் காவதாக நிலச்சுவான்தா ருடைய பங்கான நெல்லை, அவருடைய வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான வண்டி வாடகையாக அதற்கான நெல்லும் அளந்து விட்டு மிச்ச முள்ள நெல்லை விவசாயி தனக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சில்லறை அளப்புகள் மூலமான சுரண்டல் முறை இருந்தது.

எனவே சாமிகுறுண்ணி, கங்காணம், இளைப்பு, தவிப்பு, வண்டிவாடகை, வைக்கோல்கட்டு முதலிய உபரி சுரண்டல் முறைஎதுவும் இல்லாமல் சுத்தமாக கூலிபோகக் கண்டதில் பாதி, அதுதான் சுத்தவாரம் என்று விளக்கம் கூறப்பட்டது. அதன் பின்னர், இந்த உபரி சுரண்டல் முறையான சில்லறை அளப்புகள் நீக்கி கூலி போக கண்டதில் 60: 40