பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவர்சன் () 65

TTIT தாற்காலிக ஒப்பந்தம்- அதாவது நிலச்சுவான் தாரருக்கு 60 உழவனுக்கு 40 என்று உடன்பாடு ஏற்பட்டது.

பின்னர் சுத்தமான பாதிவாரத்திற்கான கிளர்ச்சி தொடர்ந்தது. அதன் பின்னர் உழவனுக்கு 60 நிலச் சுவான்தாரருக்கு 40 என்னும் கோரிக்கை வளர்ந்தது. பின்னர் மூன்றில் இரண்டு பங்கு உழுபவனுக்கு என்னும் கோரிக்கையின் மீது நீண்ட கிளர்ச்சி ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் தஞ்சை இராமநாதபுரம் நெல்லை, மதுரை திருச்சி சேலம், தென் ஆற்காடு முதலிய பலமாவட்டங் களிலும் ஆந்திரா, கேரளம், வங்காளம், பீகார் உத்திரப் பிரதேசம் முதலிய பல மாநிலங்களிலும் கிளர்ச்சி வலுவாக நடைபெற்றது. அதன்_பலனாக நியாய வாரச்சட்டம் நிறை வெற்றப்பட்டு , சுதந்திர இந்தியாவில் சாகுபடி தாரருக்கு நியாயவாரம் என்னும்உரிமை சட்டப் பூர்வம்ாகஅங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

கண்மாய்க் கரைகள், உள்வாய், மீன் பாசி முதலியவைகள் மக்களுக்குச் சொந்தம் என்னும் கிளர்ச்சிகள் தொடர்ந்து

திட நிதி ை. பின்னர் அவையெல்லாம் பல இடங்களில் அரசாங்கம் அல்லது பஞ்சாயத்துகளின் பொறுப்பில்

வந்தன. இன்னும் சில இடங்களில் பழையமுறை நீடிக்கிறது.

மூன்றாவதாக நில உச்ச வரம்புச் சட்டம் வந்தது.

மன்னர் ஒழிப்பு, ஜமீன் ஒழிப்பு, நில வெளியேற்றத் தடுப்பு நியாய வாரச் சட்டங்கள் வந்த போதிலும் உழுபவனுக்க்ே நிலம் என்னும் கோரிக்கையில் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியதிருந்தது. ரயத்துவாரி முறை முழுமை யாக வந்த போதிலும் ஏராளமான நிலத்திற்கு பட்டா உரிமையோடு நில உடமை கொண்டுள்ள ப்ெரிய நிலச் சுவான்தாரர்கள் தொடர்ந்து நீடித்தது ஒரு பெருந்தடை

யாக இருந்தது.

எனனே நிலவுடைமைக்கு உச்ச வரம்பு கட்ட வேண்டும் ஒன்னும் கிளர்ச்சி நீடித்தது. அதில் கடைசியாக தமிழகத் தில் விவசாயிகள் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ந த்தப்பட்ட மிகப் பெரிய இயக்கம் குறிப்பிடத் தக்கது அன்றைய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் மனைவி கந்தசாமி தலைமையில் கன்னியாகுமரியிலி ருந்தும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசராவ் தலைமையில் கோவையிலிருந்தும் சென்னையை நோக்கி நீண்ட பயணம், பாதயாத்திரை இயக்கம் நடத்தப்பட்டது. அது தமிழகத்தையே குலுக்கியது. அன்றைய் காங்கிர்ஸ் ஆட்சி ஆளுக்கு 25 ஏக்கர் என்னும் முறையில் நில உச்ச வரம்புச்