பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 67

நிலவுடமையாளர் கையில் உள்ளன என்று கூறலாம். சிறுநில உடமையாளர்கள், நடுத்தரநில உடமைய ளர்கள், பணக்கார நிலவுடமையாளர்கள் என மூன்று வகையாக அவர்களைப் பிரிக்கலாம். அத்துடன் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் வரை விவசாயத் தொழிலாளர்கள் இருக்கிறார் கள். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களில் சுமார் 50 சதவீதம் பேர் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களாவர்:

இந்த நிலைமையில் பாக்கியுள்ள நிலக்குவியலையும் பரவ

லாக்க வேண்டிய வேலையான, பினாமி உடமைகளை எதிர்த்தநிலப் போராட்டம் இ ன் னும் வேகமடைய வேண்டும்.

அதே சமயத்தில் 70 சதவீத விவசாய மக்களிடையே கிராமப் புறப்பாட்டாளிமக்களிடை யே ஏற் கட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் கொண்டு, புதிய உத்திகளையும் விவசாயிகள் இயக்கத்தில் நாம் வகுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரஸ் ஆட்சியினர் கொண்டு வந்த நிலச் சீர்திருத்த சட்டங்களின் நோக்கம் நிலப்பிரபுத்துவ முறையை முற்றிலும க ஒழித்து விவசாயி களுக்கு ஒரு முழுமையான விடுதலையைக் கொண்டு வருவ தாக இல்லை. நிலப்பிரபுத்துவ பிடிப்புகளைத் தளர்த்தி, இந்திய விவசாயத்தை இந்திய முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிடியின் கீழ் கொண்டு வருவதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்கிறது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் மேலே குறிப்பிட்ட சில நிலச்சீர்திருத்தச்சட்டங்கள் கொ டு வரப்பட்டதன் மூலம் விவசாய உற்பத்தி முறையில் உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் கிராமப்புறப் பாட்டாளிகளின் வாழ்க்கை முறையிலும் சிந்தனை முறையிலும் உணர்வு நிலையிலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.

மன்னராட்சி முறை ஒழிப்பு, ஜமீன் ஒழிப்பு காரணமாக கிராமப்புற மேலாதிக்கம் ஒழிக்கப்பட்டது; கிராமப்புறப் பாட்டாளிகளின் ஒரு விலங்கு ஒடிக்கப்பட்டது.

ஒரே ரயத்துவாரி முறை வந்ததன் மூலம், விவசாயிகளுக்கும் அரசுக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இது உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட முதல் மாற்றமாகும்.