பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகு அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்து சொந்த மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டினார். அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலும் பிறகு

சென்னையிலும், ட இl) தொழிற் சங்கங்களுக்குத் தலைமை தாங்கினார். தீவிரமாகப் போராடுவது

அவருடைய இயற்கை. ஆகவே 1950 க்கு முன்னரும், பின்னரும் பலமுறை சிறை சென்றதில் வியப்பில்லை.

அவர் தமிழில் ஆணித்தரமான பேச்சாளர். ஆங்கிலம், தெலுங்கு, மலையாள ம் ஆகிய மொழிகளி லும் பேசக் கூடியவர். பொன்குன்றம் வர்க்கி என்னும் எழுத்தாளர் 1968 ல் திருச்சியில் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் மலையாளத்தில் பேசினார். தோழர் அ. சீனிவாசன் அவருடைய சொற்பொழிவை இலக்கியச் சுவை சிறிதும் குறையாமல் மொழி பெயர்த்தது என் மனதில் பசுமையாக இகக்கிா க.

அவர் ஜனசக்தியின்’ ஆசிரியராக இருந்த பொழுது பாரதி து ற்ற கண்டு விழா மலரையும்(1982) மார்க்ஸ் மறைந்த நூற்றாண்டு அஞ்சலி மலரையும் (1983) சிறப்பாகத் தயாரி. தார். பிரபலமான பத்திரிகைகள் பல உதவி ஆசிரியர்களையும் ஒவியர்களையும் வைத்துக் கொண்டு சுலபமாக சிறப்பு மலர்களைத் தயாரித்து விடுவதுண்டு. ஆனால் கட்சிப் பத்திரிகைகள் பெரிய அளவில் மலர் வெளியிடுவது மிகவும் கடினம். மேற்கூறிய இரண்டு சிறப்பு மலர்களும் தமிழ் நாட்டில் நன்கு பாராட்டப் பட்டன.

1986 ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘ஜீவாவின் இலக்கியப் பணி’ என்னும் தலைப்பில் மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

அவர் மார்க்சிய ஒளி’ என்னும் தத்துவார்த்த மாத இதழின் ஆசிரியராக இருந்தார். மார்க்சிய தத்து வத்தை விளக்குகின்ற பல ஆங்கில நூல்களை மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு 1984 ம் ஆண்டில் சோவியத் நாடு நேரு பரிசு வழங்கப்பட்டது.

1984 மற்றும் 1991 ம் ஆண்டில் அவர் நாடாளு மன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட் டார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் அனுதாப அலை அவருக்கு எதிராக இருந்தது. எனவே அவர் வெற்றி பெறவில்லை.