பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பசுமைப் புரட்சித் திட்டங்களும் அதன் பலாபலன்களும்

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், காங்கிரஸ் ஆட்சியின கடைப் பிடித்த பாதை முதலாளித்துவ ப ைத யாகும். அதன் ஒரு பகுதியாகவே பழைய நிலப்பிரபுத் துவத்தை ஒரளவு மாற்றியமைக்கக் கூடிய முறையில் சில நிலச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதை முந்திய அத்தி பாயத்தில் பார்த்தோம்.அதனால் ஏற்பட்ட சில புதிய மாற்றங்களையும் _ பார்த்தோம். ஆயினும் பழைய ச்ச சொச்சங்கள் நீடிக்கின்றன. அவற்றைத் துடைத்தெறியத் தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம கும்.

இன்னும் லட்சக் கணக்கான சாகுபடியாளர்கள் இருக் கிறார்கள். அவர்கள் தாங்கள் சாகு படி செய்யும் நிலத்தின் உடமையாளர்களாக வேண்டும். உழுபவனுக்கே நிலம் என்பது முழுமையாக்கப்பட வேண்டும்.

நில உச்சு வரம்புச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப் பட வேண்டும் பினாமி நிலவுடைமைகள் ஒழிக்கப்பட வேண்டும் மிச்ச நிலம் ச குபடி செய்யும் நில மில்லா விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். சாகுபடிக்கு லாயக்குள்ள நிலம் எல்லாம் சாகு டிக்குக் கொண்டு

வரப்படவேண்டும். ஏரி குளம் கண்மாப் கரைகள், ஆற்றங்க ை கள், சாலைகள் ரயில் பாதை ஒரங்கள் அனைத்தையும் மரங்கள் வளர்ப்பதற்காக விவசாயி களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு நிலத்தின் உற்பத்தியில் விவசாயிகளின் ஊக்கத்தை உயர்த்த வேண்டும்.

இந்த வேலை-- அதாவது நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங் களை முழுமையாக ஒழிக்கும் வேலை பாக்கி இருக்கிறது. அதை முழுமையாக நின ற வேற்ற வேண்டும் அதை காங்கிரஸ் ஆட்சியினர் செய்து முடிக்கவில்லை.