பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

முதலியவை உருவாக்கப்பட்டு வளர்ச்சி பெற்றன. அரசும் விவசாய வளர்ச்சிக்குப் பல வகையான கடன்களைக் கொடுத்தது.

கிராமப்புற நிர்வாகத் தில் பஞ்சாயத்துகளும், பஞ்சாயத்து ஒன்றியங்களும் உருவாக்கப்பட்டது பஞ்சாயத்து ஒன்றியங் களுடன் வட்டார வளர்ச்சியும் இணைக்கப்பட்டது. இதில், விவசாயம் கூட்டுறவு, பஞ்சாயத்து, கால்நடைப் பிரிவுகளும் அதற்கான அதிகாரிகள் மூலம் விவசாய வளர்ச்சிப் பணி களும் அபிவிருத்தி செய்யப்பட்டன.

நவீன விவசாய முறைகள், வீரிய வித்துக்கள், ரசாயன

உரம், பூச்சி மருந்துகள், கிணற்றுப்பாசனம், மின்சார பம்பு செட்டுகள், கால்வாய்ப் பாசனங்கள் மூலம் விவசாயப் பொருள் உற்பத்தி அதிகரிக்கப் பட்டது.

விவசாய உற்பத்திப் பொருள்களின் வளர்ச்சியுடன் ஆடு மாடு கோழி பன்றி முதலிய கால்நடைகள் வளர்த்தல், தென்னை, மா, பலா கொய்யா முதலிய பழமரங்கள் வளர்த்தல் முதலிய பணிகளுக்கும் கடன் வழங்கப்பட்டு அவையும் வளர்ச்சியடைந்தன.

நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவு தானியங்களும், அதே போல தொழிற்சாலைகளுக்குத் தேவையான விவசாய உற்பத்தி மூல்மான மூலப்பொருள் உற்பத்தியும் அதிகரித்தன. நெல், கோதும்ை, கம்பு, சோளம், ராகி, பருப்பு, பழவகைகள் முதலிய உணவுப் பொருள்களின் உற் பத்தியும், பருத்தி, சணல், கரும்பு, நிலக்கட்லை, குச்சிக்

கிழங்கு முதலிய அத்தியாவசியப் பண்ட உற்பத்தித் தொழில்களுக்கு சணல் ஆலைகள், சமையல் எண்ன்ெனப் ஆலைகள், சவ்வரிசி ஆலைகள் பெருகின.

பசுமைப் புரட்சி என்னும் பெயரில் இந்திய நாட்டில், நாடு விடுதலை பெற்ற பின்னர், விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் இந்த வளர்ச்சி முதலாளித்துவ, முறையிலான வளர்ச்சியாக முரண்பாடுகள் மிக்க வளர்ச்சியாகவே உள்ளது.

விவசாய உற்பத்தித் துறையில், உற்பத்தி சக்திகள் அதாவது நீர்ப்பாசனம், உரம், பூச்சிமருந்து, கடன் நிறுவனங்கள், உற்பத்திக்கருவிகள் முதலியவை முதலாளித்துவ முறையிலேயே இந்திய நாட்டில் வளர்ச்சி யடைந்திருக்கின்றன. அதையொட்டி உற்பத்தி உறவு களும் முதலாளித்துவ முறையிலேயே வளர்ச்சிபெற்றிருக் ன்ெறன.

இன்றைய இந்தியாவில் விவசாயத்துறை உற்பத்தியில்