பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 6 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

விவசாயப் போக்குவரத்தில் மாட்டு வண்டிகள் இன்னும் நீடித்துவந்தபோதிலும், லாரிகள், டிராக்டர்,டெம்போக்கள், பஸ்கள் அதிகரித்து வருகின்றன. சிறிய நில உடமையாளர் கள் அதாவது சிறு விவசாயிகள் கூட இந்த நவீன உற்பத்திக் கருவிகளிலிருந்து தப்ப முடியவில்லை. இந்த நவீன உற்பத்திக் கருவிகளின் பயன்பாடு அதிகரிக்குமே தவிர குறையாது. அதன் பயன்பாட்டு வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது. முன்பு உற்பத்திக் கருவிகள் எல்லாம் எளிய உற்பத்திக் கருவிகள். ஏர்கலப்பை, வண்டி மாடு, தழைஉரம், தொளிஉரம், கைக்களையெடுத்தல், ஆட்கள் நேரடியாகப் போர் அடித்தல் முதலியவைகளை விவசாயிகள் தங்கள் சொந்த உழைப்பின் மூலம் நிறைவேற்றினார்கள். இப்போது அதற்கு பதில் நவீன உற்பத்திக்கருவிகளை வாடகைக்கு வாங்கிப் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து

வருகிறது.

மூன்றாவதாக கூலி உழைப்பு என்பது முதலாளித்துவ உற் ப்த்தி முறையின் முக்கிய ஆதாரமாகும். உழுதல், நிலம் சீரமைத்தல். விதைத்தல், நடுதல், களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல், அறுவடை செய்தல்,போக்கு வரத்து அனைத்திலும் வேலை செய்வதற்கு தினசரிக்கூலி அல்லது ஒப்பந்தக் கூலி முறையில் உழைப்பு செலுத்தப் படுகிறது. இது உழைப்பை விலைக்கு அதாவது கூலிக்கு வாங்கி அல்லது வாடகைக்கு வாங்கிப் பயன் படுத்துவது என்பது தான் இப்போது நடை முறைக்கு வந்திருக்கிறது.

நிலப்பிரபுத்துவ முறையில் இருந்த பலவேறு முறையிலான மறைமுகமான , திரையிடப்பட்ட சுரண்டல் முறைக்குப் பதிலாக நேரடியான சுரண்டல் முறை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான நேரடியான சுரண்டல் முறையிலான கூலி உழைப்பு விவசாயத்துறையில் வளர்ந்துநிலைபெற்றுள்ளது. அதன்ால் நிலவுடமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் கார னமாக மட்டுமல்லாமல் நவீன உற்பத்தி முறைகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் மிகச்சிறிய அளவு நிலம் வைத்தி ருந்த சிறிய விவசாயிகளும் நிலத்தை விற்றுவிட்டுக் கூலி விவசாயிகளாக, விவசாயத் தொழிலாளர்களாக மாறி வந்துள்ளார்கள். அதனால் கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

கிராம்த்தில் விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விட்டு நகரங்களுக்கு வேலை தேடிச்செல்லும் நிலையும் அதிகரித்து

வருகிறது. நான்காவதாக மார்க்கட்டிற்காக, விற்பனைக்காக உற்

பத்தி செய்தலும் முதலாளித்துவ அடிப்படையில் மிகவும் முக்கியமானதாகும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில்