பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த அமைப்பில் அவர் பல்லாண்டுகளாக உறுப்பினராக இருக்கிறார். (அன்றைய) சோவியத் யூனியன், செக்கோஸ்லோ வாக்யா ஆகிய நாடுகளில் அவர் விரிவாக சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். நான் 1981 ல் மாஸ்கோ வில் மொழிபெயர்ப்பாளராக இருந்த பொழுது அவரை வரவேற்று உபசரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்கள் ஓயாத கட்சிப்பணிகளுக்கு இடையில் புத்தகங்களும் பிரசுரங்களும் எழுதிக் குவித் தார்கள். அவர்களை அடுத்து வந்தவர்கள் கட்சிப் பணிகளிலும் அரங்கப் பணிகளிலும் அன்றாட அரசியல் வேலையிலும் மூழ்கி விட்டார்கள். பொது மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதற்கு, கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வழி காட்டுகின்ற முறையில் எழுதுவதில்லை என்று சிலர் குறை சொல்வதுண்டு (இதற்கு விதிவிலக்காக எழுது

கின்ற கட்சித் தலைவர்கள் உண்டு).

கட்சியின் அரசியல் தீர்மானம் எல்லா பிரச்சினைகளை யும் விளக்கி விடுமா?அதைப் படித்தால் முழுத் தெளிவு ஏற்பட்டு விடுமா? அத்தீர்மானத்தின் ஒளியில் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச் சினைகளைப் பற்றி புத்தகங்கள் , பிரசுரங்கள் எழுத வேண்டும். இது காலத்தின் கட்டாயம். தோழர் அ. சீனிவாசன் இப் புத்தகத்தை எழுதியதன் மூலம் மார்க்சியவாதிகளுக்கு வழிகாட்டியிருக்கிறார்.

கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இப் புத்தகம் தோழர் அ. சீனிவாசனின் மார்க்சிய சிந்தனையில் கனிந்த பழம். முடிவுரை நீங்கலாகப் பத்து அத்தியாயங்களில் இந்திய விவசாயத்தின் வளர்ச்சியையும் இன்றைய நெருக்கடியையும் விவசாயிகளின் அவல நிலையையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.

பண்டைத் தமிழகத்தின் நிலவளம்,ஆங்கிலேயர் ஆட்சி யில் விவசாயத்தின் வீழ்ச்சி, விவசாயிகளின் உரிமைப் போராட்டங்கள், காங்கிரஸ் நிலச்சீர்திருத்தங்கள், பசுமைப் புரட்சியின் விளைவுகள், கிராமப்புறங்களில் வர்க்கக் கட்டமைப்பு மாற்றங்கள் ஆகிய அத்தியாயங் கள் சிந்தனையைத் துரண்டுகின்றன.