பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 O கிராமப் புறப் பாட்டாளிகளை தோக்கி . .

இடுபொருள்களின் விலைகள் உயர்ந்து கொண்டேயிருக் கின்றன. பஸ் கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. போக்குவரத்து சாதனங்களின் செலவும் கட்டணமும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அத்துடன் உழைப்பு சக்திக் கான செலவும் குறிப்பிட்ட அளவில் அதிகரித்து வருகிறது

இதனால் இன்று விவசாயத்தின் உற்பத்திச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மறுபக்கம் விவசாய உற்பத்திப் பொருள்களின் மார்க்கட் விலை மேலும் கீழுமாய்க் போய்க் கொண்டிருக்கிறது. உற்பத்திச் செலவில் சம்மந்தப்பட்ட பொருள்களின் விலை உயர்வுக்கு ஈடாக உற்பத்தி ப்பொருள்களின் விலை உயர வில்லை.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இதன் காரணமாக விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாகப்பார்த்தாலும் நாடு விடுதலை பெற்ற கடந்த நாற்பது ஆண்டுகளில் நெல்லை விளைய வைத்தவர் கள் பணக்காரர்கள் ஆகவில்லை. ஆனால் நெல்லை வாங்கி அரிசியாக்கி நகரங்களில் விற்பவர்கள் லட்சாதி பதிகளாகியிருக்கிறார்கள் அரிசி வாங்கி உபயோகிப் போர்கள் அரிசிக்கு என்ன விலை கொடுக்கிறார்கள் என்று பார்க்கும் போது அந்த விலைக்கும் விவசாயி களின் நெல்லிற்குக் கிடைக்கும் விலைக்கும் சம்பந்த மில்லை .

பருத்தி விளையவைத்தவன் பணக்காரன் ஆகவில்லை. பருத்தியை விவசாயிகளிடம் வாங்கி அதைப்பஞ்சாக்கி, நூல்ாக்கி துணியாக்கி விற்பவர்கள், மில் முதலாளிகள் கோடீஸ்வரர்களாகியிருக்கிறார்கள். மக்கள் வாங்கும் துணி விலைக்கும் விவசாயிகளின் பருத்திக்குக் கிடைக்கும் விலைக்கும் சம்பந்தமில்லை.

கரும்பு விளைய வைத்தவன் பணக்காரன் ஆகவில்லை. கரும்பை வாங்கிக் கசக்கி அதைச் சர்க்கரையாக்கி மிட்டாய் ஆக்கி விற்பவர்கள், சர்க்கரை ஆலை முதலாளி கள் கோடீஸ்வரர்களாகியுள்ளார்கள். மக்கள் வாங்கி உபயோகிக்கும் சர்க்கரையின் விலைக்கும் விவசாயி களுக்கு-அவர்களுடைய கரும்பிற்குக் கிடைக்கும் விலைக்கும் சம்பந்தமில்லை.

நிலக்கடலை, தேங்காய், இதர எண்ணெய் வித்துக்கள் விளைய வைத்தவன் பணக்காரன் ஆகவில்லை. அந்த நிலக் கடலையை, தேங்காயை, இதர எண்ணெய் வித்துக்களை