பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

இரண்டாவது, ரசாயன உரமிடுதல் ஒரு தலைப்பட்சமாகவே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நிலத்தின் அமிலத் தன்மை அதிகரித்து நிலத்தின் சாரம் பாதிக்கப்பட்டிருக் கிறது. நிலத்திற்கு உரமிடுதலில் உயிரணு உரம் (தொளி உரம், தழை உரம் முதலியன) அத்துடன் ரசாயன உரம் இணையாக இட வேண்டும். ஆனால் இப்போது உயிரணு உரம் குறைந்து, ரசாயன உரம் மட்டுமே அதிகரிக்கும் போது நிலம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனை பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ் நாட்டில் இது இன்னும் அதிகரித்துள்ளது. எனவே ரசாயன உரத் தி னால் ஏற்படும் நன்மைகள் குறைந்து பாதிப்புகள் அதிகரிக் கத் தொடங்கி புள்ளன.

மூன்றாவதாக, பூச்சி மருந்து: பூச்சி மருந் துகளில் பல பன்னாட்டுக்கூட்டு நிறுவனங்களின் கொடுஞ்செயல் களால் கலப்படம் அதிகமாகி, மருந்துகளின் தரம் குறைந்து விட்டது ஒரு பக்கம். மறுபக்கம் அதன் பாதக விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் பூச்சி மருந்து கள் அளவுக்கு மீறி அடிப்பதால் , பயிர் களை பாதிக்கும் பூச்சிகள் மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சிக்கு அவசிய மான உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. உயிரணு உரம் குறைவதால் புதிய உயிரின வளர்ச்சியும் குறைந்து விட்டது.

தரம் குறைந்த பூச்சி மருந்துகள், சீரான தெளிப்பு இல்லாமை, மருந்துகளின் எதிர் விளைவுகள் முதலிய பாதகங்களைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் பசுமைப் புரட்சியில் இல்லை.

நான்காவதாக, பசுமைப் புரட்சியின் பகுதியாக விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் வளர்க்கப்பட்டன. நமது நாட்டின் ஆராய்ச்சி நிலையங்கள் அரிய பணிகளை ஆற்றியிருக் கின்றன. நமது விஞ்ஞானிகளின், ஆராய்ச்சியாளர்களின், வல்லுநர்களின் ஆலோசனைகளை நமது அரசு எந்த அளவுக்கு செயல் படுத்துகிறது என்பது ஒரு கேள்வி.

இருப்பினும் நமது விவசாய ஆராய்ச்சி நிலைங்கள் பல அரியபணிகளைச் செய்து வருகின்றன. பல நாடுகளும் அவை களைப் பாராட்டுகின்றன. அந்த அரிய பணிகளில் ஒன்று பல புதிய வீரிய வித்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகும். புதிய வீரிய வித்துக்கள், உயிரினங்கள், உயிரணுக்கள் உண்டாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால் பழைய, தொன்று தொட்டு உண்டாக்கப்பட்ட, பல உயிரினங்கள், உயிரணுக்கள், தாவர ரகங்கள் ஆகியவை களைப் பாதுகாக்கவும் வேணடும்.