பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 8 5

ஆதிக்கமுமாகும். கருப்புப்பண பலத்தின் செயல்பாடுகளும் அத் தியாவசியப் பொருள்களின் பதுக்கலும் அதிகமாகி விலை வாசிகள் மேலும் உயர்வதற்கும் காரணமாகின்றன. பண வீக்கத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அளவுக்கு மீறி நோட்டுகள் அச்சடிப்பதுமாகும்.

இரண்டாவது, உற்பத்தி தேக்கம் ஏற்பட்டுள்ள நெருக்கடி யாகும் இதன் விளைவாக வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிப்பதாகும். பல தொழிற்சாலைகள் மூடப்படு கின்றன. புதிய தொழிற்சாலைகள் அதிகம் வளரவில்லை. இந்த நிலை உலக முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் ஏற்பட்டிருக்கின்றன.வளர்ச்சியடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் மொத்தம் மூன்று கோடிப் பேருக்கு வேலை இல்லை என்று கணக்குக் கூறப்படுகிறது. அந்த அளவுக்கும் அதிகமாகவே சுமார் நான்கு கோடி பேருக்கு இந்தியா விலும் வேலையில்லை. இந்த எண்ணிக்கை பதிவு செய்யப் பட்டிருப்பவர்களை பொறுத்து மட்டுமேயாகும். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. தமிழ் நாட்டில் பல பஞ்சாலைகள் மூடப்பட்டிருக் கின்றன. பல ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இவைகளின் உற்பத்திபாதிக்கப்பட்டு நின்று விட்டது. தஞ்சை மாவட்டத்தில் காவிரியில் தண்ணிர் இல்லாதபோது சாகுபடி பாதிக்கிறது. இதனால் ஒரு ஆண்டிற்கு இருநூறு கோடி ரூபாய் பெறு மான வருவாய் வருவது நின்றுவிடும். இதே போல பல துறைகளிலும் இந்தத் தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.

1967-ம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி சாயத் தொடங்கிவிட்டது எனவும் 1974-ம் ஆண்டிற்குப்பின் இந்தியாவின் வளர்ச்சி சரியத் தொடங்கியிருக்கிறது என்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் எடுத்து கூறுகின்றன.

மூன்றாவதாக நிதி நெருக்கடியாகும். முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நிதிப் பற்றாக்குறையால், போது

மான நிதி இல்லாமையால் நடைபெறாமல் தேங்கு கின்றன. இதனால் குறிப்பாக கல்விவசதிகள், ஆஸ்பத்திரி வசதிகள், சுகாதார வசதிகள், சாலை வசதிகள் முதலிய

மக்கள் நலப்பணிகள் பராமரிப்பு இன்றிப் பாதிக்கப்பட்டிருக் கின்றன. இந்திய நாட்டிலோ வெனில் எதற்கெடுத்தாலும் அரசிடமிருந்து பணமில்லை, நிதியில்லை என்றே பதில் வரு கிறது. ஒரு பக்கம் gTITIT&5)T LDfT&JT பனம் இருப்பது போல் காட்சியளிக்கிறது. இந்தியாவின் ஒராண்டு வரவு செலவு பட்ஜட் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் போய்