பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

விட்டது. தமிழகத்தின் வருடாந்திர பட்ஜட் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் போய்விட்டது. ஆயினும் பல வேலைகளுக்கும் பணம் இல்லை, நிதியில்லை என்று பதில் வருகிறது.

பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், சாலைகள், மின் இணைப்புகள் ரயில் பாதைகள், புதிய பஸ் வழித் தடங்கள், ஏரி குளம்

கண்மாய் மராமத்து .ன், புதிய நீர்ப்பாசன வசதிகள், சுகாதார ஏற்பாடுகள், குடி தண்ணிர், ஆசிரியர்களுக்கு அரசு ஊழி பர்களுக்கு சம்பளம், நகர்ப்புறத் தெருக்கள் பராமரிப்பு, இப்படி : தியெடுத்தாலும் பனம்

இல்லை, நிதி பில்லை என்னும் பாட்டைக் கேட்கலாம். விவசாயிகளுக்கு கடன் நிவாரணம், வட்டி தள்ளுபடி, மின் கட்டணத் தள்ளு படி, விளைச்சல் இல்லாமைக்கு வரிவஜா

என்று எதைக் கேட்டாலும் நிதி நெருக்கடி காரணம் காட்டப்படுகிறது.

ஆனால் மறுபக்கத்தில் ஆடம்பரச் செலவுகள் குறைய வில்லை. பழைய முதலமைச்சர் ஒருவர் ஒரு இடந்திற் குப் போய்வர சுற்றுப் பயணம் செய்ய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு , அமெரிக்காவிற்கு ஆஸ்பத்திரிக்குப் போய் வர இரண்டு கோடி ரூபா ப் செலவு ; , ஒடு

முன்னாள் பிரதமர் மே ற்கு வங்காளத்திற்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போய் வர மாநில அாசுக்குமட்டும் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு: கட்சிகளுக்கு பல லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கூட தேர்தல் செலவு கள், நமது நாட்டில் தான் தாங்க முடியாத தேர்தல் செலவுகளும் அமைச்சர்கள் அதிகாரிகளின் சுற்றுப்பயன ஆடம்பரச் செலவுகளும் எல்லாவற்றிற்கும் மேலாக கணக்கில் வராத கருப்புப்பணம் உலகநாடுகளிலேயே இந்தியாவில் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. அதற்கும் மேல், அந்நியச் செலாவணிச் சட்டத்தை ஏமாற்றி, கொள்ளை லாபபணத்தைக் கடத்தி. அல்லது வெளி நாடுகளில் வியாபாரம் செய்து லாபம், கமிஷன்

கிடைப்பதைச் சரியாகக் கணக்குக் காட்டமால், இந்தியா விற்குக்கொண்டு வரம ல் வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் டிப்பாசிட் செய்யப் பட்டுள்ள பல ஆயிரம்

கோடிப்பணம். . இவையெல்லாம் நமது நிதி நெருக்கடிக்குத் துணையாகச் செல்கின்றன.

இந்திய நாட்டில் மிகப்பெரிய நதிகள் உள்ளன. இவை கள் எல்லாம் வற்றாத ஆறுகள். நமது நாட்டில் ஒரு பக்கம் கடும் வறட்சி, மறுபக்கம் கொடுமையான வெள்ள மும் வெள்ளச் சேதமும் ஆண்டு தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்க முடியாதா? நிச்சய மாக முடியும். நதிகளை இணைக்கலாமா? இணைக்கலாம். நமது பொறியியல் வல்லுநர்கள் ஏராளமான திட்டங்கள்