பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 87

வைத்துள்ளார்கள். நதிகளை இணைத்தால் நமது நீர்ப் பாசனத்தை விரிவு படுத்தினால் இந்தியாவின் உணவு உற் பத்தியைப் பல மடங்கு பெருக்கலாம் நமது நதிகளில் ஏராளமான நீர்மின் நிலயங்களைக் கட்டலாம். ஏராளமான மின்சாரம் கிடைக்கும். நமது ரயில் போக்குவரத்து முழு வதையும் மின்சாரமயமாக்கி விடலாம். புதிய ரயில் பாதைகளையும் போட்டு அதையும் மின்சாரமயமாக்கலாம். பெட்ரோல் டீசல் மிச்சப்படும். லாரி போக்குவரத்தைக் குறைக்கலாம். எமனுக்கும் வேலை குறையும். அதற்கு மேலும் மின்சாரத்தை மிச்சப்படுத்தி அண்டைநாடுகளுக்கும் கெ டுக்கலாம். இதற்கெல்லாம் நமது அரசுக்கு நிதியில்லை. நாட்டில் பணமில்லையா? கருப்புப்பணத்திலும் கடத்தல் பணத்திலும் வெளிநாட்டு வங்கிகளில் போடப் பட்டுள்ள இந்தியர் பணத்தி லும் ஒரு பகுதி எடுத்தால் போதும். இத் தகையை அரிய திட்டங்களை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய மக்கள் கண்ட கனவை, வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் பெய்யும் திட்டங்களை நிறை வேற்றலாம்.

இவ்வளவு பெரிய திட்டங்களை நிறைவேற்ற ஆள் வேண்டுமா? இந்தியாவில் நான்கு கோடிப் பேருக்கு மேல் வேலையில்லை. அத்துடன் நாற்பது கோடி ஆண் பெண் கள் உழைக்கும் சக்தி கொண்டவர்கள். ஆளுக்கு ஒரு மண் வெட்டி கூடையும் எடுத்தால் போதும். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதை நிறுத்தி பாடுபடும் மக்களையும் பொறியியல் வல்லுநர்களையும் நாட்டின் அறிவாளி களையும் திரட்டினால் அற்புதமான சாதனைகள் செய் யலாம். விசித்திரமான இந்த நாட்டை வளப்படுத்தி உலகுக்கும் உணவளிக்கலாம்.

ஆயினும் இந்தியப் பொருளாதரத்தில் இந்திய முதலாளி களுக்கும் அவர்களுடன் சேர்ந்து இணைந்துள்ள அந்நிய, பன்னாட்டு கூட்டு நிறுவன முதலாளிகளுக்கும் ஆதிக்கம் இருப்பதால், அவர்களுடைய செல்வாக்குப் பிடிப்பு இந்திய அரசிலும் மாநில அரசுகள் பலவற்றிலும் இருப் பதால் நமது சீரிய திட்டங்களுக்குப் பணமில்லை. நி நெருக்கடியால் நாட்டின் பட்டினியைப் போக்க (

ல்லை. தாகத்தைப் போக்கவில்லை. மதுரையைச் சேர்ந்த நமது பாட்டாளிவர்க்கக்கவிஞன் பரிணாமன் சிறந்த தனது கவிதை ஒன்றில் நமது நாட்டில் கங்கையும் காவிரியும் இருந்தும் நமது தாகம் தீரவில்லை, காசியும் ராமேஸ்வரமும் இருந்தும் நமது பாவம் தீரவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது ஒரு நல்ல உண்மையை வெளிப் படுத்துகிறது.

இந்த அவலநிலையை மாற்ற வேண்டும். இதை மாற்ற வேண்டுமானால் முதலாளித்துவ சுரண்டல் முறையை நீக்கி