பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயிகள் இயக்கமும் புதிய கடமைகளும் என்னும் கடைசி அத்திய யம் விவசாய இயக்கத்தின் ஊழியர்

களுக்கு வழி காட்டுகிறது.

இந்த நூல் கல்லூரி மாணவர்களுக்கு - கருத்துச் கர்ங்கம்;விவசாய இயக்க ஊழியர்களுக்கு இன்றியமை யாத கையேடு.

தோழர் அ. சீனிவாசனுடைய நீண்ட அரசியல் அனுபவமும் மார்க்சீய ஆய்வு முறையும் புத்தகத்தை சிற்ப்பாக எழுதுவதற்கு உதவியிருக்கின்றன.

அவர் தமிழ் இலக்கியங்களை, குறிப்பாக வைணவ சமய நூல்களைப் படிக்க வர். எனவே புத்தக முழுவதிலும் இலக்கிய நூல்களிலிருந்து பல மேற்

காள்களைத் தந்திருக்கிறார்.

இந்த நூலில் குறைகள் இருக்கலாம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய விவசாயிகள் நடத்திய வீரப் போராட்ட்ங்களைப் பற்றி அவர் விரிவாக எழுதியிருக்க

வேண்டும். மாபெரும் தெலிங்கானா போராட்டத் தைப் பற்றி அவர் சுருக்கமாக எழுதியிருக்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் என்.கே.கிருஷ்ணன் ‘தெலிங்கானா போராட்டம் ஒரே சமயத்தில் வரலாறாகவும் விரக்கதையாகவும் இருக்கிறது’ (Telengana armed Struggle is Both History and Legend) என்று ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டார். நாலாயிரத்துக் கும் அதிகமானவர்கள் உயிரை அர்ப்பணித்த அந்தப் போராட்டம் இந்தியாவின் விடுதலைப் போராட்டத் திலும் விவசாய்ப் பாட்டாளிகளின் இயக்கத்திலும் வரலாற்றுப் பாத்திரத்தைக் கொண்டிருக்கிறது. நிஜாம் ரஜாக்கர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் படை களையும் ஆயுதபலத்தையும் எதிர்த்து சாதாரண விவசாயிகள் நடத்திய போராட்டம் வீரக் கதையா கவும் இருக்கிறது.

தெலிங்கானா. போராட்ட வரலாற்றை இந்திய

விவசாயிகளும் மற்றவர்களும் மறக்கக் கூடாது.

பல்கலைக் கழகங்களில் அரசியல் விவசாயப் பொருளா தாரம், சமூகவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர் கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.