பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

ஆனால் நமது நாட்டின் முதலாளித்துவப் பொருளா தாரமும் ஆட்சி முறையும் அவ்வளவு சுலபமாக நமது வளத்தை அதிகப்படுத்தி நெருக்கடியைத் தீர்க்கவில்லை.

ஆறாவதாக, உணவு நெருக்கடி. இந்த நெருக்கடி இன்று உலக அளவில் உள்ள நெருக்கடியாக வளர்ந்திருக்கிறது. உலகின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ற வாறு உணவு உற்பத்தியிலும் அதன் சீரான விநியோகத்தி லும் பயன்படுத்தும் முறையிலும் அபிவிருத்தியும் வளர்ச்சி யும் ஏற்படவில்லை. உணவு தானியம் மாமிசம், முட்டை, மீன், பழம், பால் முதலிய பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்ட முயற்சி தேவை. உலகின் நில வளம் நீர்வளம் வனவளம் கனிவளம் கடல் வளங்களை முறைப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். முதலாளித்துவ முறையிலான அராஜக வளர்ச்சி தான் இன்றைய நெருக்க டிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இன்று முதலாளித்துவ நாடுகளில் ஏராளமான உணவுப்பொருள்கள் வீணாக்கப்படு கின்றன. உணவு தானியங்கள் வினாக்கப்படுகின்றன. பால் வளம், மீன்வளம், மாமிசம் முட்டை வகைகளை அதிகப் படுத்துவதற்கான வாய்ப்புகள் எராளம் உள்ளன. அவை களை முழுமையாக வளர்ப்பதற்கு முதலாளித்துவத்திற்கு வரம்பு உள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் உணவுப்பொருள் உற்பத்திக்கு மிகவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இவைகளை விரிவுபடுத்தினால் உணவு நெருக்கடிக்கு தீர்வு கான முடியும். அதற்கு இந்திய முதலாளித்துவத்தால் முடிய வில்லை.

ஏழாவதாக, இயற்கைச் சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி ஒரு அபாயகரமான பரிமாணத்திற்குச் சென்றிருப்பதை விவரங்கள் காட்டுகின்றன. பல நாடுகளி லும் காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. மலைகள் மொட்டையாகிக் கொண்டிருக்கின்றன. ஆறுகள் அசுத்தப் பட்டிருக்கின்றன. காற்று மண்டலம் விஷமாக்கப்பட்டிருக் கிறது. கடல்வளம் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. நிலவளம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க் கொண்டேயிருக்கிறது.

சுற்றுப்புறச் சூழல் அனைத்தும் மாசுப்படுத்தப்பட்டிருக் கிறது. மனித வாழ்விற்கே பெரும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுப் பொருள் களை கண்டபடி ஆறுகளிலும் கடலிலும் கலந்து விடுகிறார் கள். சாக்கடைகள், தொழிற்சாலை புகை அனைத்தும் தண் னிரையும் காற்றையும் அசுத்தப்படுத்துகின்றன.

நகரங்களில் சுகாதாரக்கேடுகள் அதிகரித்து விட்டன. தாவரங்கள், விலங்கினங்கள், பறவை இனங்கள் எல்லாம்