பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 2 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

முதலாளித்துவ அமைப்பின் இயல்பின் பகுதியாக வளர்ந் திருக்கிறது. இந்த ஒழுக்கக் கேடுகளை ஒழிப்பதானால், அதற்கான சமுதாய மாற்றத்துடன் சேர்த்துத் தான் அதைச் செய்ய வேண்டும். *

முதலாளித்துவத்தின் இந்த நெருக்கடியை சமுதாயத்தின் அனைத்து அம்ச நெருக்கடி என்று பொருளாதார நிபுணர் கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நெருக்கடி முதலாளித்துவத் தின் இறுதி கட்டத்தில் யுக சந்திப்பில் முதலாளித்துவத்தின் இயல்பான வெளிப்பாடாக வந்திருக்கிறது என்பதைக் காண வேண்டும்.

ஒரு சமூகப் பொருளாதார அமைப்பு முடிந்து அடுத்த புதிய சமூகப் பொருளாதார அமைப்பு தோன்றுவதற்கு முன்பு ஏற்படும் சீரழிவுகளை இப்போது நாம் முதலாளித் துவ உலகில் காண்கிறோம்.

யுகசந்திப்பில் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கி, நல்ல வர்களுக்கெல்லாம் சோதனைகள் ஏற்பட்டு கெட்டவர் களின் கொட்டங்கள் அதிகப்படுகின்றன என்று கிதையின் வாக்கியம் குறிப்பிடுகிறது.

நிலப்பிரபுத்துவம் கம்பீரமாக ஆட்சி செய்த காலம் கடந்தபின் கடைசி காலத்தில் அழியும் போது ஏற்பட்டி ருந்த சீர்கேடுகள், ஊதாரித்தனம், ஒழுக்கக்கேடுகள் நிறைந்து காணப்பட்டதைப் பார்த்தோம்.

‘பொய் சூது தீமை யெல்லாம் ஆரண்யத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்தோங்கின. செம்மை யெல்ாம் பாழாகி கொடுமையே அறமாகித்திர்கிறது . இதுதான் இன்றைய முதலாளித்துவ அமைப்பர்கக் காட்சியள்க்கிறது.

இத்தகைய அனைத்தளாவிய நெருக்கடியின் அலை கள் சோவியத் யூனியன், சீனா முதலிய நாடுகளையும் பாதிக் கின்றன. அதன் விளைவுகளை எதிர்த்தும், அதன் மூல வேர்களைக்_களையவும் அங்கு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

சீனாவில் பொருளாதாரத்துறையிலும் அரசியல் g/G), யிலும் பல சீரமைப்பு_நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிலும் கடுமையான சூழ்நிலைகளுக்கிடையிலும் சீரமைப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த நாடுகளில் இந்த தெருக்கடிகளின் விளைவுகளுக்கு ஜன நாயக முறையில் தீர்வுகாண்பதற்கு பல முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.