பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 93

முதலாளித்துவ உலகில் உள்ள அனைத்து அம்ச பொது நெருக்கடியின் பளுவை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் வளர்முக நாடுகள் மீதும், பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் மீதும், வடக்கு நாடுகள் தெற்கு நாடுகள் மீதும் திணிப்பதற்கு முயற்சிக்கின்றன.

வளர்முக நாடுகளின் வளர்ச்சிக்கு முதலீட்டு வசதி, எந்திரம் தொழில் நுட்ப வசதி, மூலப்பொருள் வசதி, உழைப்பு சக்தி தேவைப்படுகிறது. இதில் மூலப்பொருளும் உழைப்பு சக்தி யும் வளர்முக நாடுகள்டம் இருக்கின்றன. முதலீட்டு வசதி யும் எந்திரம் தொழில் நுட்ப வசதிக்கு வளர்ச்சியடைந்த நாடுகளை எதிர் பார்க்க வேண்டியதிருக்கிறது. முதலீட்டு வசதிக்கும் எந்திரம் தொழில் நுட்பத்திற்குச்செலவும் விலை யும் அதிகம். மூலப்பொருளும், உழைப்பு சக்தியும் மலிவு. எனவே உலக வர்த்தகத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் மேலேயும் வளர்முக நாடுகள் தாழ்ந்தும் கிடக்கின்றன. இதனால் ஏற்றுமதி இறக்கும் தி வேறுபாட்டில் ஆண்டிற்கு ஐயாயிரம் கோடி டாலர் வரையிலும் வளர்முக நாடுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிற்கு மட்டும் ஆண்டிற்கு இரண்டாயிரம் கோடி டாலர் பற்றாக் குறை ஏற்படுகிறது. அதாவது வளர்ச்சியடைந்த, ஏகாதி பத்திய நாடுகள் ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து

இரண்டாயிரம் கோடி டாலர் உபரியாகக் கொள்ளை கொண்டு போகிறார்கள் என்று பொருள். இது மேலும் அதிகரிக்கலாம். நாம் ஏழ்மையாகிக் கொண்டேயிருக்

கிறோம். நமது செல்வம் ஆண்டு தோறும் கொள்ளை போய்க் கொண்டேயிருக்கிறது.

இவ்வாறு வெளி நாட்டு வர்த்தகத்தில் ஏற்படும் பற்றாக் குறை, அத்துடன் உள்நாட்டில் இந்திய முதலாளித்துவத் திற்கு ஏற்பட்டுள்ள அனைத்து ஆம்ச நெருக்கடியின் பளு முழுவதையும் இந்திய முதலாளித்துவம் தனது அரசாங்க ப்ல்த்தின் மூலிம் இந்திய மக்களின் தலையில், இந்திய விவசாயிகளின் தலையில் சுமத்தி வருகிறது.

இந்த சுமை முழுவதையும் இந்திய விவசாயிதாங்கி, அவன் டுேமையாக உன்ழத்து உற்ப்த்தியைப் பெருக்கிய போதி லும், நாளுக்கு நாள் அதிகமாக கடனாளியாகி,ஒட்டாண் டியாகிக் கொண்டிருக்கிறான்.

அதனால் இந்திய விவசாயத்திற்கும் விவசாயிகளின் வாழ்க்கைக்கும் இதுவரை எஇபோதும் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான் கஷ்டமும் நெருக்கடியும் ஏற்பட்டிருக் கிறது. அந்த நெருக்கடியின் தீவிரத்தன்மை அண்மைக் கர்ல்த்தில் மிகவும் அதிகமாகியிருக்கிறது.