பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சினிவாசன் O 9.5

கட்டி தண்ணிரை நிறுத்தி விட்டது. நதிநீர் எல்லோருக் கும், பொதுவானது: அதில் இரு மாநிலங்களின் நலன் களும் பாதிக்காத வகையில் காவிரி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டியது மிகவும் அவசியமாகும். கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர்ப்பிரச்னை மிகவும் அதிக மான நெருக்கடிக்கு வந்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. 1989-ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் சேர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஒரு மனித சங்கிலிப் போராட்டத் தையே நடத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்தப் பெரிய இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்

தார்கள்.

மத்தியில் வி. பி. சிங் தலைமையில் ஏற்பட்ட தேசிய முன்னணி அரசு காவிரி நீர்ப் பிரச்னையை நீதிமன்றத் திற்கு அனுப்பியது. நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

காவிரிப் பாசனத்தில் மற்றொரு முக்கிய பிரச்னை, தஞ்சை மாவட்டத்திலுள்ள கால்வாய்களாகும்.தஞ்சை மாவட்டத் தில் காவிரிப் பாசனத்தில் உள்ள கால்வாய்கள் கிளைக்கால் வாய்கள் எல்லாம் பெரும்பாலும் துார்ந்தும், பழுதாகியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், சரியாக பராமரிக்கப்படா மலும், உடனுக்குடன் மராமத்து செய்யப்படாமலும் பாதிக்கப்பட்டு அதனால் வரக்கூடிய தண்ணிரும் சேதமா கிறது. அதே சமயத்தில் மழை பெய்தால் போதுமான வடி கால்களும் சரியாக இல்லாததால் நீர் தேங்கி சேதப்படு கிறது. வெள்ளங்கள் ஏற்பட்டு நஷ்டங்கள் ஏற்படுகின்றன. தஞ்சை திருச்சி, தென்ஆற்காடு மாவட்டத்திலுள்ள சிதம்பரம் தாலுகா பகுதிகளில் உள்ள கால்வாய்கள், வடி கால்களை நவீனப்படுத்தவேண்டும் என்று விவசாயிகள் பல முறை கோரியுள்ளார்கள். ஆயினும் அரசு அசையவில்லை.

மேலும் காவிரி பாசனப் பகுதியில் தண்ணிரை சிக்கன மாகப் பயன் படுத்தவும், அதற்கேற்றவாறு, சாகுபடி முறை பயிர் மாற்றம் முதலியவைகளிலும் புதிய முறைகள் கொண்டு வரப்படவும் வேண்டியதிருக்கிறது. அதிலும் அரசு கவனமும், நிர்வாகத்தின் கவன்மும் மக்களுடைய கவனமும் அதிகரிக்க வேண்டியதிருக்கிறது.

இன்று தமிழகத்தின் மொத்த உணவு உற்பத்தியில் சரிபாதி அளவு உற்ப்த்தியாகும் காவிரி பாசனப் பகுதி கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இந்த நெருக்கடி செயற்கை யாலும் இயற்கையாலும் ஏற்பட்டிருக்கிறது. செயற்கையில்