பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 97

நீர்ப்பாசனம், குடி நீர், கால் நடைகளுக்குத் தண்ணிர், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க, குளிர்ச்சியாக்க, மரங் களை வளர்க்க நிலத்தடி நீர் ஊற்றுகளைப் பாதுகாக்க, இவ்வாறு பல நோக்கம் கொண்டு இந்த நீர் நிலைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்த ஏரி குளம் குண்மாய்கள் ஊருணிகள் முதலிய நீர்நிலை

கள் எல்லாம் இப்போது மேடிட்டுப் போயுள்ளன. அதனு டைய வரத்துக்கால் வடிகால்கள் துார்ந்து மேடிட்டுப் போயிருக்கின்றன. அவைகளின் கரைகள், சுவர்கள்,

கலுங்கல்கள், மதகுகள் முதலியனவெல்லா ம் சேதப்பட்டுக் கிடக்கின்றன.

சென்னை நகருக்குக் குடிதண்ணிருக்கு ஆதாரமாகவும் பாசனத்திற்குப் பயன் படுவதாகவும் உள்ள தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் வாத்துக்கால், அந்த ஏரியிலிருந்து புழலேரிக்குச் செல்லும் கால்வாய் முதலியவைகள் எல்லாம் துார்ந்து மேடிட்டு ப் போயிருக்கின்றன.

இந்தியாவிலேயே, தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய ஏரி வீராணம் ஏரி. காவிரியும், கொள்ளிடமும் கரை புரண்டு வந்தாலும் வீராணம் ஏரியின் விப்புகளுக்குக் காணாது எனத் தமிழ் நாட்டில் ஒரு பழமொழியே உண்டு. அந்த வீராணம் ஏரியில் சுமார் 17 அடி ஆழ அளவிற்கு தண்ணிர் நிறுத்தலாம். அது தான் அதன் ஆரம்ப வடிவம். ஆனால் இப்போது நாலரை அடி அளவு தண்ணிர்தான் நிறுத்த அந்த அளவிற்கு அந்த ஏரி துார்ந்து போயிருக்

றது.

தமிழ் நாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியாகும். அதற்கு ஒரு கதை உண்டு. மதுராந்தகம் ஏரிக்கரையில் ஒரு ராமர் கோவில் இருக்கிறது. அந்த ராமருக்கு ஏரி காத்த ராமர் என்றும் அந்த ஏரிக்கு ராமர் காத்த ஏரி என்றும் பெயர் வழங்குகிறது. ராமபிரானே தனதுகோதண்டத்தைத் தாங்கி நின்று அந்த ஏரிக்கரையைக் காத்துக் கொண்டிருப்ப தாகக் கதை கூறப்படுகிறது.

இந்த ஏரியின் கொள்ளளவு ஒரு பெருக்கு பெருகினால் ஒன்றரை ஆண்டிற்கு தண்ணிர் நிற்கும். எனவே தொடர்ந்து அந்த ஏரியில் தண்ணிர் நிற்கும். ஆனால் இப்போது ஒரு பெருக்கு பெருகினால் ஆறு மாதங்கள் கூட தண்ணிர் நிற்ப தில்லை. அதனால் 1985-நவம்பரில் கிளியாற்றில் பெரிய வெள்ளம் வந்தபோது ஏரி தாங்காமல் கலுங்கலிலேயே உடைப்பு ஏற்பட்டு, எதிரில் இருந்த சாலைப் பாலம் சேதப் பட்டு, ரயில்வே பாலத்தைப் பெயர்த்துத் தூக்கி துாரப்