பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நாளடைவில் நூலகப் பயிற்சி பெற்ருல் நல்ல பயனுள்ள நூலகப் பணி களைச் செய்ய இயலும் என்பது பலரது கருத்து ஆகும். பொதுக் கல்வி அறிவு நூலகவியல் அறிவு ஆகியவற்ருேடு இப்பணியில் ஈடுபடு வோருக்கு, கிராமத்தின் அருமை பெருமைகள். நாட்டின் வளர்ச்சிக்குக் கிராமத்தின் பங்கு முதலியவை பற்றிய தெளிந்த அறிவும் இருத்தல் அவசியமானதாகும். மேலும் அவர்கள் பண்புடையவர்களாகவும், நமது நாட்டின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றுகின்ற புனித எண்ணத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக, கிராம மக்களது விருப்பு, வெறுப்புகளே எல்லாம் நன்கு அறிந்து, அவற்றிற்கேற்ப, பக்குவமாக அவர்களே நூலக உணர்வு உடையவர்களாக ஆக்குகின்ற திறனையும் உடையவர் களாக அவர்கள் இருத்தல் வேண்டும். தொழில் திறமை. பணி செய்யும் ஆர்வம், மனிதாபிமானம், மலர்ந்த முகத்துடன் பொறுமையாக நூலகத்திற்கு வருகின்ற மக்களை வரவேற்று, கனிவாகப் பேசி அவர் களுக்கு உதவுகின்ற இயல்பு,முதலியவை இப்பணியில் ஈடுபடுவோர்க்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் ஆகும். மேலே கூறியவற்ருேடு பரந்த நூலறிவு, உயர்ந்த நோக்கம், பிறரைப் புரிந்து கொள்ளக் கூடிய திறன், பிறருக்கு வழிகாட்டுவதற்குரிய தன்னம்பிக்கை, வருங்காலத்தை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய திறமை, அதற்கேற்ப கிராம மக்களை வழி நடத்துகின்ற ஆற்றல், விட்டுக்கொடுக்கின்ற இயல்பு. உலகியலுக் கேற்பத் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளுகின்ற பண்பு. பரிவு, சுறு சுறுப்பு, பணியில் ஆர்வம், அக்கறை, மகிழ்ச்சி. உண்மையான உழைப்பு, பிறரைத் தன்வயப்படுத்துதல் நன்னடத்தை நல்ல பழக்க வழக்கங்கள், பிறரோடு ஒத்துழைக்கும் தன்மை, மேலதிகாரிகளுடை ய நல்லெண்ணத்தைப் பெறுகின்ற வண்ணம் பணிசெய்தல் முதலியனவும் அவர்களிடம் காணப்படுமாயின் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன் போல் விளங்கும், பேரும் புகழும் பெறுவர். இவற்றிற்கெல்லாம் மேலாக பிறரது கண்டன உரைகளைப் பொறுக்கிள்ற பொறையுடைமையும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இத்துடன் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களது எண்னத்தை அறிந்து, அதற்கேற்ப அவர்கள் வழிகாட்டுவோர்களா யின், அது அவர்களுக்குச் சிறந்த வெற்றியைத் தேடித்தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பயன்படும் கூரல்களும் பயிற்சி பெற்ற நாலகர்களும் கிராம நூலகங்களை மேற்பார்க்கும் பணியில் ஈடுபடுவோர்க்கு பரந்து விரிந்த அறிவு இருத்தல் நல்லது. நூலகவியல் அறிவோடு, _