பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், ஆட்சிமுறை, கிராமச் சமூக இயல், சமூகப் பொருளாதாரம், பிறப்பு, நோய் முதலிய சமுதாய நிலைப்புள்ளி விவரங்கள். கிராமங்கள், ஊர்கள். நகர்கள், ஆகியவற்றிடையே காணப்படும் வேறுபாடுகள் ஆகியவை பற்றிய அறிவும் அவர்களுக்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. ஆதாரக் கல்வியின் சிறப்பு, அக்கல்விக்குரிய பாடத் திட்டம், நூல்கள், புதிதாகப் படிக்கத் தொடங்கி இருக்கும் மக்களுக்குரிய நூல்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இறுதியாக, நூலகங்களைத் திறம்பட நடத்துகின்ற திறனும், அன்ருட வேலைகளை நல்ல முறையில் முடிக்கின்ற அநுபவமும், அரியவற்றை. நல்லவற்றை, கேட்போர் மனங்கொள்ளும் வண்னம் எடுத்துக் கூறுகின்ற சொல் வன்மையும் அவர்களுக்கு இருத்தல் வேண்டும். இதுவரை கூறியவற்ருல், கிராம மக்களுக்குப் பயன்படும் ாால்களையே கிராம நூலகங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதும், பயிற்சி பெற்ற நூலகர்களே கிராம நூலகங்களைச் செம்மையுடன் ா க்க முடியும் என்பதும் இனிது பெறப்படும். கிராம நூலகங்கள் நமது தாய்த் திருநாட்டில் பல்கிப் பெருகவேண்டும். கிராம நூலகங்கள் பல்கிப் பெருகின் கிராம மக்கள் அறிவு வளரும். அறிவு வளரின், அவர்கள் ஆற்றும் பணிகள். தொழில்கள் ஓங்கும். தொழில்கள் ஓங்கின் வளம் பெருகும். பொருள் சிறக்கும். பொருள் சிறக்கின் மக்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, வாழ முடியும். அவ்வாறு வாழின் நமது இந்தியநாடு இன்பப் பெட்டகமாக விளங்கும். வழில் கொழிக்கும் சோலையாக இலங்கும். வளம் சுரக்கும் அமுத காபியாக விளங்கி நமது நாட்டு மக்களது உறுபசியை, ஓவாப் பிணியை அகற்றும். நாட்டில் வளம் கொழிப்பின், நாட்டு மக்கள் நலமாக வாழின் உலகம் நமது நாட்டை வியந்து பாராட்டும். உலக அரங்கில் நமது நாட்டின் நிலை உயரும். நமது நல்ல கொள்கைகள் உலகெங்_றும் பாவும். அமைதி எங்கும் தவழும் அறம் தழைக்கும் ! அன்பு பங்கும் அருள் ஆட்சி புரியும் ! அகிலம் நிலைத்து வாழும் !