பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கிராம நூலக ஆட்சி 1. நூல்களைப் பயனுற ஆக்கல் நூல்களை விலைக்கோ, நன்கொடையாகவோ வாங்கிய பிறகு, அவற்றை வாசகர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ஒழுங்கு படுத்துதல் அவசியம். முதலாவதாக, நூலகத்திற்குத் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நூலையும் நூலடங்கலில் (Accession Register) பதிவு செய்தல் வேண்டும். நூல்கள் நூலகத்திற்கு வந்த வரிசைப்படி நூலடங்கலில் நூல்களைப் பதிவு செய்து, ஒவ்வொரு நூலுக்கும் துால் வரிசை எண் (Accession Nபாmber) கொடுத்தல் வேண்டும். ஒவ்வொரு நூலைப் பற்றியும் நூலடங்கலில் பின்வரும் விவரங்கள் குறிக்கப்படுதல் வேண்டும். 1. தேதி 2. நூல் வரிசை எண் 3. ஆசிரியர் பெயர் 4. நூலின் பெயர் 5. வெளியீட்டு இடம்; வெளியீட்டாளர் பெயர், வெளியிடப் பட்ட ஆண்டு. 6. நூலின் விலை 7. யாரிடமிருந்து நூல் வாங்கப் பெற்றது. நூலின் தலைப்புப் பக்கத்திற்குப் பின்புறத்திலும், நூலின் வேறு சில பக்கங்களிலும் நூல் வரிசை எண்ணை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும். நூலை விலைக்கு வாங்கி இருந்தால், விலைப்பட்டியலிலும் (Bill) நூல்வரிசை எண்ணை எழுத வேண்டும். நால்க ைவகைப் படுத்துதல் கிராம நூலகத்திற்குரிய நூல்களை மிக எளிய முறையில் பொருள் வாரியாக வகைப்படுத்தி தொகுத்தல் வேண்டும். பொதுவாக கிராம நூலகத்தில் இடம்பெறும் நூல்களின் எண்ணிக்கை குறைவாகவே