பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கண்காட்சிகள் : நூல்களின் உறைகள், படங்கள். நாட்டுப்படங்கள், கேலிச் சித்திரங்கள், சுவரொட்டிகள், செய்தித் துணுக்குகள், பருவ இதழ்கள் முதலியவற்றைக் கொண்டு கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். நூல்களையும் காட்சிக்கு வைக்கலாம். தரையிலும், சுவரிலும், காகிதத்திலும், துணியிலும், அட்டைகளிலும், வண்ணங்கள், வண்ணப் பொடிகள் முதலியவற்றைக் கொண்டு அலங்காரங்கள் செய்யலாம். ஏ. சிறப்பு திகழ்ச்சிகள் : N தேசிய, சமூக, சமய விழாக்கள், தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை நூலகம் கொண்டாடலாம். இவ் விழாக்களை நூலகம் தனது திட்டங்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயல் திட்டங்களை ஏற்பாடு செய்யும்போது, அவற்றில் பங்கு கொள்வோர்க்கு தங்களின் சொந்தத் திறனையும், அறிவாற்றலும் பயன்படுத்துவதற்குத் தக்க வாய்ப்பளித்தல் வேண்டும். நூலகர் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகருமாக இருந்து, மற்றக் காரியங்களை அவர்களே செய்யும்படி விடுதல் வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் ஒரிருவரின் முழுப் பொறுப்பில் விட்டு விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம், நாலகத்துடனும் நூல்களுடனும் கிராம மக்கள் நேரடியாக நெருங்கிய தொடர்பு கொள்ளும்படி செய்ய முடியும்.