பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூ ன் மு. க ம் ' கிராம நூலகக் கையேடு ' என்னும் இச்சிற்றேடு மதுரை காமராசர் பல்கலைக் கழக நூலகவியல் துறையின் முதல் படைப்பாகும். இம் முதற் படைப்பு தன்னிகரில்லா நமது தாய்மொழியாகிய தமிழ்மொழியிலே வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும். நமது பாரதமணித் திருநாடு பல கிராமங்களால் ஆயது. கிராமங்கள் வலுவும் பொலிவும் பெற்ருல்தான் நமது தாய் நாடு உலக அரங்கில் ஓர் உயர் ந் த இடத்தைப்பெற முடியும். கிராமங்கள் சிறக்க வேண்டுமெனின் கிராம மக்கள் கல்வி அறிவுடையவர்களாக விளங்க வேண்டும். அதற்கு அரசு கிராமங்கள் அனைத்திலும் பள்ளிகளையும் நூலகங்களை யும் அமைக்க வேண்டும். நேரு பெருமகனார் கூறியபடி ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நூலகம் அவசியம் தேவைப் படுகிறது. அந்நூலகத்தின் சிறப்பினை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், 'மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனுேபாவம் வானைப்போல் விரிவடைந்து தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி இலகுவது புலவர் தரும் சுவடிச்சாலை' என்று பாங்குடன் பாடியுள்ளார். கிராம நூலகங்களை ந ன் கு அமைப்பதில் ஓரளவு துணையாக இச்சிறுநூல் விளங்கும் என்ற நம்பிக்கையில் இந்நூல் வெளியிடப்படுகின்றது. இதனை எழுதி வெளியிடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த நமது பல்கலைக் கழக இருபெருந் துணைவேந்தர்களாகிய பேராசிரியர் சை. வே. சிட்டிா அவர்கட்கும் டாக்டர் வா. செ. குழந்தைசாமி அவர்கட்கும், இதனை வெளியிடுவதற்கு இசைவு அளித்தும், பொருள் வழங்கியும் உதவிய பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும் நான் என்றென்றும் கடப்பாடுடையேன். இதனை மிகக் குறுகிய காலத்தில் நல்ல முறையில் அச்சிட்டு உதவிய மதுரை காமராசர் பல்கலைக் கழக கூட்டுறவு அச்சகத்தினருக்கு எனது பாராட்டினை நான் தெரிவிக்கின்றேன். நூலகவியல் துறை மதுரை காமராசர் பல்கலைக் கழகம் பல்கலைநகர் துாை-2ேன் 02.1 rol திருமலைமுத் துசுவாமி டிசம்பர், 1978