பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கிராம நூலகம்


கிராம நூலகத்தின் சிறப்பு

         எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது தமிழ் மூதுரை கிராமங்கள் நிறைந்த நமது நாட்டில் படிப்பறியாத கிராம மகளுக்கு கல்விச் செல்வத்தை அளிக்கும் பணி, சமூகப் பணிகளில் எல்லாம் மகுடம் போன்றதாகும். கிராமத்திற்கு இது இல்லை - அது இல்லை என்றில்லாமல் - இல்லாதது எதுவும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் நகரத்தில் உள்ள வசதிகள் அனைத்தையும் கிராமங்களுக்குச் செய்ய வேண்டும் என்பது நமது அரசின் உள்ளக்கிக்கை ஆகும். கிராம மக்களின் அறிவு விளக்கைத் தூண்டி, ஏற்றம் காணுகின்ற திருப்பணியைச் செய்யக் கூடியது கிராம நூலகமே ஆகும்.
         கிராம மக்களது சீரிய வாழ்விற்கு, சிறந்த நிலைக்கு, வாழ்வாங்கு வாழும் நெறிக்கு, வாழ்க்கை வளத்திற்கு வழிவகுப்பன கிராம நூலகங்கள் என்பதை அனைவரும் அறிவோம். எனவே ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நூலகம் அமைக்க வேண்டியது நமது தலையாய

கடமை ஆகும்.

         நமது தாய்நாடு ஒரு விவசாய நாடாகும். அத்துடன் அது எண்ணிறந்த கிராமங்களைக் கொண்டதாகும். ஏறத்தாழ நமது மக்களில் எண்பது சதவிகிதத்தினர் கிராமங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு நூற்ருண்டுக் காலமாக நமதுநாடு அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த பொழுது, நமது கிராம மக்கள் அனைவரும் அடியோடு புறக்கணிக்கப்பட்டிருந்தனர். ஆனல் இன்று நமதுநாடு உரிமை பெற்றதாக விளங்குகின்றது. நமது நாட்டை நாமே ஆளுகின்றேம். எனவே கிராம மக்களது நலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதற்குக் காரணம் கிராம மக்களே நமது நாட்டின் உயிர்நாடியாக, முதுகெலும்பாக விளங்குவதே ஆகும். நமது நாட்டினத்துக்குரிய வாழ்க்கையின் அடித்தளமாக அவர்கள் விளங்குகின்றர்கள். அத்துடன் நமது நாட்டின் குறிக்கோள்களில் பல கிராம மக்களது வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருப்பதை நாம் காணலாம். கிராமப் பஞ்சாயத்துக்கள் அல்லது கிராம