பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆட்சி மன்றங்களின் வழியாகக் குடியாட்சி. எளிமை, கடும் உழைப்பு. வாய்மை, பணியினைச் செவ்வனே ஆற்றும் திறன் முதலிய பண்புகளுக்கு இன்று உறைவிடமாக கிராம மக்கள் விளங்குகின்றனர். எனவே அவர்களைக் கல்வி அறிவுடையவர்களாக விளங்கச் செய்ய வேண்டியது நமது கடமை ஆகும். அதற்குத் துணையாகவிளங்குவது கிராம நூலகமே ஆகும். தி சாம நர லகத் தின் (3 நா க்கங்கன் கிராம நூலகத்தின் முக்கிய நோக்கங்கள் அல்லது குறிக்கோள்கள் பின் வருவனவாகும் : 1. கிராம நூலகமானது கிராமத்தில் வாழும் குழந்தைகள் . முதியவர்கள் கல்வியின் சிறப்பையும், கல்வி அறிவால் பெறுகின்ற பயன்களையும் உணர்வதற்கு உறுதுணையாக விளக்க வேண்டும். மேலும் அது கிராம மக்கள் பள்ளிப்படிப்பால் தாம் ஏற்கனவே பெற்றிருக்கின்ற ஓரளவு கல்வி அறிவினைப் புதுக்கியும் பெருக்கி,ம் கொள் வதற்குப் பயன்பட வேண்டும். 2. உழவில்ைதான் நம்நாடு உயரமுடியும் என்பதை உள்ளத்திலே கொண்டு, அதனையே உயர் தொழிலாகக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவர்க்கும் உண்டி கொடுக்கும் உத்தமர்களாகிய உழவர்களுக்கு உயிர்க் குருதியாக கிராட நூலகம் விளங்க வேண்டும். உற்பத்தித் திறனைப் பெருக்கவும் , மண்வளம், பயிர்கள், விற்பனைக் களங்கள், கால்நடைகன் ஆகியவை பத்றி உழவர்களின் அறிவை வளர்க்கவும், கூட்டுறவுகள், வேசைாண்மைக் கருவிகள், வேளாண்மைத் தொடர்புடைய அடிப்படைப் பொறியியல் ஆகியவை பற்றி உழவர்கள் அறிந்து கொள்ளவும் கிராம நூலகம் உதவ வேண்டும். மண் வளத்தைப் பெருக்குவதற்குரிய வழிமுறைகளை உழவர் அறிந்து கொள்ளவும். மழை, வடிகால் பற்றியும், மர வளர்ப்புக் குறித்தும் உழவர்கள் தெரிந்து கொள்வதற்குக் கிராம நூலகம் உதவியாக இ குக்க வேண்டும். 3. இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதாரத் திட்டங்களே உழவர்கள் புரிந்து கொள்வதற்குக் கிராம நூலகம் உதவுதல் வேண்டும். மக்கள் தொகை, கிராமங்களிடையே நல்லுறவு, தொழில் உறவுகள் ஆகியவை பற்றியும் கிராம மக்கள் அறிந்து கொள்ள கிராம நூலகம் உதவ வேண்டும். 4. முழுமையான குடும்ப வாழ்க்கையை உ ருவாக்குவதற்கு உதவியாகக் கிராம நூலகம் இருக்க வேண்டும்; சமுதாயம் பற்றிய