பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

13


ஆட்டத்திலும், கிரிக்கெட் ஆட்டத்திலும், அதிகமாக ஈடுபடுவதால், வில்லாற்றலில் மக்கள் தேர்ச்சி பெறாமல் போகின்றனர். ஆகவே நாட்டின் பாதுகாப்புக்கு உரிய கலையான வில் பயிற்சியைக் கற்கும் பொருட்டும், அதனைக் காக்கும் பொருட்டும், மேலே குறிப்பிட்ட இரண்டு விளையாட்டுக்களையும் மக்களை ஆடவிடாமல், தடைச்சட்டத்தை நான்காம் எட்வர்ட் என்பவர் இயற்றித் தடை செய்தார்.

மக்கள் இந்த ஆட்டங்களை ஆடக்கூடாது என்று சட்டம் போட்டு தடைவிதித்ததல்லாமல், மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்றும் குறிப்பிட்டிருந்தார். தடைச்சட்டத்தை மீறி விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு 50 ஷில்லிங் அபராதத்துடன், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நில்லாமல், விளையாடுவதற்கு இடம் தருகின்ற (மைதான) உரிமையாளருக்கு 100 ஷில்லிங் அபராதமும், மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் கொடுக்கப்படும் என்றால், யார்தான் இடம் தருவார்? எவர் வந்து தடையை மீறி விளையாடுவார்? இவ்வாறாக, 185 ஆண்டுகள் தடை போட்ட சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாமல் இந்த இரண்டு ஆட்டங்களும் முடங்கிக் கிடந்தன. அடங்கிக் கிடந்தன.

ஆயுள் காலம் வரை தடைபோட்டவாறே ஆட்சியை முடித்துக் கொண்ட நான்காம் எட்வர்ட் மன்னருக்குப் பிறகு, தொடர்ந்து அரியணை ஏறியவர்கள் அனைவரும் இவ்வாறே தடை போட்டனர் என்பதால், ஹேண்ட் இன் ஹேண்ட அவுட் ஆட்டத்துடன் கிரிக்கெட்டும் இணையாகவே இருந்தது என்பதும், அதனால் கிரிக்கெட் ஆட்டத்தின் முன்னோடி என்று இதனைக் கூற முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஏறத்தாழ 1300ம் ஆண்டில் முதலாம் எட்வர்ட் மன்னர் (Kind Edward) அரண்மனை செலவு கணக்குப்பட்டியலைப் பார்க்கும் பொழுது, வேல்ஸ் இளவரசன் அதாவது எட்வர்ட்