பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆடினால் தண்டனை

பந்தயம் கட்டிக்கொண்டு சூதாட்டம் போல கிரிக்கெட் மைதானத்தில் ஆடப்பட்டு வந்த ஆட்டம், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலேயும் தொடர்ந்திருக்கிறது என்பார்கள்.

பதினாறாம் நூற்றாண்டின், காலகட்டத்தில் கிரிக்கெட் வெகுவேகமாக வளாச்சி பெறவில்லை. மாறாக பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலே முன்னேற்ற நடைபோட்டது. கடுமையான தண்டனைகளையும் ஆட்டக்காரர்கள் ஏற்கக்கூடிய சூழ்நிலைகளில் வளர்ந்தன. 1620ம் ஆண்டு அயர்லாந்தில் ஆலிவர் கிராம்வெல் என்னும் வீரர், பழி சுமத்தப்பட்டு கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினார். ஆட்டத்தில் பங்கு பெற்றார் என்பதற்காக, பலரறிய பழித்துக் கூறப்படும் அவல நிலைக்கும் ஆளானார். அயர்லாந்து முழுவதும் கிரிக்கெட் பந்துகளையும், விக்கெட் குறிக்கம்புகளையும் எரித்துவிட வேண்டும் என்று சட்டம் போடப்பட்டது.

1623ம் ஆண்டு சாக்ஸ் மாகாண கோயிலின் திடலில் கிரிக்கெட் ஆடிய 6 பேர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.

மெய்ட்ஸ்டோன் என்ற நகரத்தில், பல இளைஞர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாடினார்கள் என்பதால், அந்த நகரத்தை தூய்மையற்ற நகரம் என்றும் இழித்துரைத்தார்கள். இது 1030ம் ஆண்டின் நிலை.

இப்படியாக எதிர்ப்பு நிலை, அடக்கு முறை எழுந்து வந்தபோதிலும் கிரிக்கெட் ஆட்டம் வளர்ந்து கொண்டே தான் வந்தது.

மகிமை பெற்ற ஆட்டம்

மக்கள் மனதிலே கிரிக்கெட் பற்றிய பெருமையான எண்ணமே நின்று நிலைத்தோங்கியது, இங்கிலாந்து நாட்டின்