பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அதையும்விட, இன்னொரு நிகழ்ச்சியையும் அறிந்து கொண்டோமானால், அரசர்கள் எந்த அளவுக்குக் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபாடு காட்டினார்கள் என்பதும் நமக்கு நன்கு புரியும். வேல்ஸ் இளவரசன் என்று அழைக்கப்பட்ட பிரடரிக் என்பவர், கிரிக்கெட் ஆட்டத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். எந்த கிரிக்கெட் போட்டி நடந்தாலும், அதில் போய் பங்கு பெறும் ஆர்வம் நிறைந்தவர். 1750ம் ஆண்டு ஒரு முறை அவர் பந்தாடிக்கொண்டிருந்தபோது, காலில் கிரிக்கெட் பந்து தாக்கவே, அதுவே பின்னாட்களில் அவரது மரணத்திற்கு மூல காரணமாக அமைந்தது என்றும் கூறுவார்கள்.

அரசனின் மரணத்திற்கு கிரிக்கெட் பந்தடிதான் காரணம் என்று பலர் பலவாறு கூறினாலும், அவரது அரசு வாரிசுகள் அதனைப் பொருட்படுத்தவே இல்லையாம்.

அவரது மகன்கள் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஆகியவர்கள், தந்தையின் கிரிக்கெட் ஆர்வத்திற்கும் கொஞ்சமும் குறையாதவர்களாயும், சிறந்த ஆட்டக்காரர்களாகவும் விளங்கி இருக்கிறார்கள்.

மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பார்களே! அதுபோல, அரச பரம்பரையும், பிரபுக்கள் குடும்பமும், பணக்கார வம்சத்தினரும் கிரிக்கெட்டைப் போற்றும் பொழுது, கிரிக்கெட் எப்படி வளராமல் இருக்கும்.!

பரபரப்பான பந்தயங்கள்

பந்தயம் கட்டியல்லவா ஆட்டத்தைத் தொடங்கினார்கள்! அப்படி என்றால் ஆட்டம் எப்படி நடைபெறாமல் போகும்? பந்தயப் பணம் குறைந்தது ஒரு ஆட்டத்திற்கு 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை வைத்து ஆடியிருக்கிறார்கள். 1750ம் ஆண்டிலிருந்து 1790ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், பந்தயத்தின் தொகை