பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஹேம்பிள்டன் கிளப்

1760ம் ஆண்டு, ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுவே, இங்கிலாந்து நாட்டின் சிறந்த சங்கமாகவும் செயல்பட்டது. 'கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தத் தொட்டில்' என்பதாகவும் அழைக்கப்பட்டது. கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் மெக்கா என்றும் புகழப்பட்டது. அதுவே ஹேம்பிள்டன் கிளப் (Hambledon Club) என்பதாகும்.

ஹேம்பிள்டனைச் சேர்ந்த சிறு ஹேம்ப்ளியர் கிராமப்புற பண்பாளர்கள் ஒன்று கூடியே இந்த ஹேம்பிள்டன் சங்கத்தை நிறுவினார்கள். அதற்குப் பெரிதும் உதவியாளராக இருந்து உதவியவர் நிலக்கிழாராகத் திகழ்ந்த ரிச்சர்டு நைரன் (Richard Nyren) என்பவராவார். அவர் தந்த அளவிலா உற்சாகமும், அன்புசால் ஆதரவுமே இந்த ஹேம்பிள்டன் சங்கம் தோன்றிட உறுதுணையாக விளங்கின. நைரனும் அவரது குமாரர் ஜான் நைரன் என்பவரும், இதில் இன்னும் உற்சாகத்துடன் ஈடுபட்டதால்தான், கிரிக்கெட் ஆட்டம் மேலும் செழிப்புறும் வழிகண்டது. ஆரம்ப நாட்களில் விக்கெட் என்றால். இரு சிறு குழிகள் தான் புல் தரையில் தோண்டப்பட்டு இருந்தன. பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஓடி வந்து கோட்டைத் தொடுவதற்கு முன், குழியில் பந்தை உருட்டிவிட்டால், அவர் ஆட்டமிழந்து போவார். குழிகளுக்கும் கோட்டிற்கும் இடையிலுள்ள தூரம் 46 அங்குலமாகும்.

விக்கெட்டுகளாக குறிக்கம்புகள் 1700ம் ஆண்டு முதல் தான் உருவெடுத்தன. அதன் பின் இரண்டு கம்புகள் நடப்பட்டு, அதன் மேல் குறுக்குக் கம்பம் ஒன்றை வைத்திட, அது சிறுகதவு போலத் தோற்றமளித்தால்தான், விக்கெட்டு என்ற பெயரையும் பெற்றது. ஆனால், பந்தானது விக்கெட்டிற்கு இடையிலேயே சென்று, விக்கெட்டை வீழ்த்தாது போன ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு, மூன்றாவது குறிக்கம்பு (stump) ஒன்று