பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


மெர்லிபோன் கிரிக்கெட் சங்கம் (MCC)

இப்பொழுது இஸ்லிங்டன் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் ஒய்ட் கன்டியூட் கிளப் (White Conduit Club) என்ற சங்கம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பிக்கப்பட்டு, ஆர்வத்துடன் செயல்பட்டு, பல போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், அதிலிருந்து மேலும் ஒரு சங்கம் 1787ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பெற்றது.

கிளைத்தெழுந்த புதிய சங்கத்திற்கு மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் (Marrlybone Cricket Club) என்னும் பெயர் வைக்கப்பட்டது. இந்தச் சங்கத்தை தோற்றுவிக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்களில் எட்டாம் வின்செல்சியும், சார்லஸ் லினாக் என்பவரும் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் ஆடும் மைதான இடத்தையும் அளித்து உதவியவர் தாமஸ் லார்டு '(Thomas Lord) என்பவராவார். இன்று இங்கிலாந்தில் உள்ள லார்டு மைதானம் இவரது பெயரால்தான் விளங்குகிறது.

மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் ஆரம்பித்தவுடன் அதற்கு என்று ஒரு மைதானம் தேவைப் படவே, டார்செட்ஸ்கொயர் என்னும் இடத்தில் உள்ள தனது மைதானத்தை தாமஸ் லார்டு வழங்கினார். அந்த மைதானத்தை அவர்களும் பயன்படுத்தி ஆடி வந்தார்கள். அதன் பயனாக விளைந்த போட்டியானது, இந்த எம்.சி.சி. (M.C.C.) ஆட்டக்காரர்களுக்கும் ஒயிட் கன்டியூட் கிளப் ஆட்டக்காரர்களுக்கும் நடைபெற்றது. இதில் எம்.சி.சி.அணியினரே 83 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டனர்