பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

33


பழக்கமாம். ஏனென்றால், கிறிஸ்டினா அணிந்திருந்த கவுன், முழங்கால் பகுதிக்குக் கீழே குடை ராட்டினம்போல விரிந்த அமைப்புள்ள தன்மையில் தைக்கப்பட்டிருந்ததால், கீழாக எறியும்பொழுது கவுன் தடுத்ததால், கையை மேலே தூக்கி எறிந்து ஆடினாராம். அந்தப் பழக்கத்தையே ஜான் வில்லிஸும் பின்பற்றினார்.

ஒரு முறை போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜான் வில்லிஸ் எறிந்த பந்தையெல்லாம் முறையிலா பந்தெறி என்று நடுவர் கூறவே, வேகமடைந்த வில்லிஸ் கோபத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறி, குதிரை மேலேறி போயேவிட்டார். அவர் ஆட்டத்தை விட்டுமட்டுமல்ல, கிரிக்கெட்டையே விட்டு விலகிக்கொண்டார்.

அதன்பின் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை . 1822ம் ஆண்டு அவர் அகால மரணமடைந்தார். ஆனாலும், அவர் தான் கொண்ட கொள்கையை, மேற்கொண்ட இலட்சியத்தை விடவில்லை . அதாவது, அவர் தனது கல்லறையில் கீழ்க்காணும் குறிப்புக்களைப் பொறிக்கச் செய்தார்.

'இங்கே துயில் கொள்ளும் ஜான் வில்லிஸ் என்பவர் ஆண்மையுள்ள ஆட்டத்தின் ஆதரவாளராக எப்பொழுதுமே விளங்கியவர். கிரிக்கெட் ஆட்டத்தில் கை சுற்றி எறியும் முறையை முதன்முதலில் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியவர்' என்பதாக எழுதச் செய்தாராம்.

இவ்வளவு புரட்சிகரமாக இருந்து, அமரரான ஜான் வில்லிசின் கனவு 1828ம் ஆண்டு நினைவாகியது. ஆமாம். கைசுற்றி எறியும் முறை ஆட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அமுலாகியது. அதன் பின்னர் 1864ம் ஆண்டு இது பற்றி ஆராய்ந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், கை உயர்த்தி எறிந்திட ஆட்டக்காரர்கள் தொடங்கினர். அதுவும் பல பிரச்சினைகளை எழுப்பி எரிமலையாய் புகைந்தது.