பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆட்டத்தைப் பரப்பிடும் பேற்றினையும் புகழையும் பெற்றுக்கொண்டார்கள்.

அத்துடன் நில்லாமல், கனடாவிலும், வட அமெரிக்கப் பகுதிகளிலும் கிரிக்கெட் ஆட்டம் பரவியது என்றாலும், அவ்வளவாக ஏற்றம் பெறாமலேயே இருந்து போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

கிரிக்கெட் ஆட்டத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாகவும், தளமாகவும் அமைந்த மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம், ஆட்டம் வெளிநாடுகளுக்குப் பரவிப் போய்விட்டது என்று அறிந்து பெருமையுற்றுப் பேசாமல் இருந்துவிடவில்லை. 1859ம் ஆண்டு, கனடாவுக்கு இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவை அனுப்பி ஆடச் செய்து, போட்டி நடத்தி, ஆட்டத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. புகழுக்கும் வழி வகுத்தது.

கனடாவுக்கு இங்கிலாந்துக் குழு பயணம் செய்து ஆட்டங்கள் ஆடியதை கேள்விப்பட்டவுடன், ஆஸ்திரேலியாவும் 'ஆகா' அற்புதம்' என்று பாராட்டிவிட்டு அமைதியாக இருந்துவிடவில்லை. மெல்பர்ன் நகரத்திலுள்ள தொழிலகத்தின் பண உதவி மூலமாக, 1861-62ம் ஆண்டில் ஆஸ்திரேலியா குழுவும் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, வெற்றிகரமாக பவனி வந்தது. அந்த சுற்றுப் பயணம் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து நாடுகள் வரை சென்றது.

அதன் பின்னர், ஆஸ்திரேலியா, மற்றும், தென்னாப்பிரிக்கா நாடுகள் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் ஆட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டன.

சுற்றுப்பயணமாகச் சென்று கிரிக்கெட் ஆட்டம் ஆடிய முதல் முயற்சியின் விளைவாக, வேறுபல மாற்றங்களும் தோன்றத் தொடங்கின. 1876 வரை இப்படியே சென்று