பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


முதலில் ஒரு போட்டி, அதுவும் வரலாற்றில் குறிப்பிடும்படியான ஒரு போட்டி, ஒல்டு எடோமன்ஸ் (Old Etomans) குழுவிற்கும் இந்திய நாட்டு பார்சியர்களுக்கும் (Parsees) 1784ம் ஆண்டு நடைபெற்றது. அதுவே, இந்தியர்களின் விழிப்புணர்ச்சியை இந்த ஆட்டத்தில் விரைவுபடுத்தும் தூண்டுகோலாக அமைந்தது.

1712ம் ஆண்டு கல்கத்தா நகரில். கல்கத்தா, கிரிக்கெட் கிளப் என்றொரு சங்கத்தை உருவாக்கினார்கள். சங்கம் தோன்றியதற்குப் பிறகு கல்கத்தா நகரில் மட்டுமல்ல, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் கூட இந்திய மக்கள் கிரிக்கெட் ஆட்டத்தைப் பெருவாரியான அளவில் விளையாடத் தலைப்பட்டார்கள். அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கத்தான் இருந்தது.

ஆங்கிலேயர்களுடன் அதிக நெருக்கமும் இணைப்பும் கொண்டிருந்த பணக்கார இந்தியர்களும், சமஸ்தான இளவரசர்களும், இளைஞர்களும் இந்த ஆட்டத்தை அதிகமாக விரும்பி ஆடியதால், அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து துணையிருந்து உதவியதால், இந்திய துணை கண்டமெங்கும் இந்த ஆட்டம் வளர்பிறையென்று வளர்ந்து கொண்டது. வளர்ச்சி கண்டது.

அத்துடன், 1804ம் ஆண்டு அதே ஒல்டு எடோமன்ஸ் குழுவினர் , அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அலுவலர்களுடன் ஒரு கிரிக்கெட் போட்டி ஆட்டத்தை ஆடினார்கள். அது கல்கத்தா நகரில் உள்ள ஏடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதன்பின் பல சங்கங்கள் ஆங்காங்கே தோன்றத் தொடங்கின.

பம்பாயில் 1841ம் ஆண்டு பார்சியர்களால் கிரிக்கெட் சங்கம் ஒன்று தோற்றுவிக்கப் பெற்றது. இது மத சம்பந்தமான அபிமானிகளால் உருவான ஒன்று என்றாலும், கிரிக்கெட்