பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

47


அமைந்திருக்கிறது. ஆரம்பக்காலத்தில், விக்கெட் என்பதே கிடையாது. ஆட்டக்காரர்கள், இரண்டு வட்டமான குழிகளைத் தோண்டிக் கொண்டு ஆடினார்கள். குழிக்கு முன்னால் 46 அங்குலத்தில் ஒரு எல்லைக்கோடு (Crease) இருக்கும். அடித்தாடுபவர் (Batter) அந்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் நிற்கும் போது பந்தை உருட்டிக் குழியில் விட்டுவிட்டால், ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். அந்தக் குழிகள்தான் ஆரம்ப விக்கெட்டாகும். பந்தை அடிப்பதில், அதிக லாவகமும் குறியும் வந்து விட்டதாலே, பந்தும் அடிபட்டு அதிக தூரம் சென்றது. பந்தெடுக்க ஒடும் ஆட்டக்காரர்களுக்கு, தூரத்தில் இருந்து பார்த்த போது, குழிகள் கண்ணுக்கு தெரியாது போனதால் பந்தைக் குறிபார்த்து எறியமுடியவில்லை என்றதோர் குறை இருந்ததால், குழி தெரிவதற்காக அதிலே ஒரு குச்சியை ஊன்ற முதலில் முடிவு செய்தனர். இப்போது, அந்தக் கம்பினைக் குறிபார்த்து அடித்துவிட்டால், (அவர் எல்லைக்கு வெளியே இருந்தாலும்) அடித்தாடும் ஆட்டக்காரர் ஆட்டமிழந்து போய்விடுவார். காலம் இப்படியே இருக்கவில்லை. ஆட்டக்காரர்கள் மனமும் அமைதியடைந்து விடவில்லை. பந்தும் அடித்தாடுபவர்களால் அதிக தூரத்திற்குச் செலுத்தப்பட்டபோது, ஒரு கம்பு இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. குறிபார்த்து அடிக்க ஒற்றைக் கம்பு உதவவும் இல்லை. எனவே, இன்னொரு கம்பு அதனுடைய இணையாகத் தேவைப்பட்டது. 1700 ஆம் ஆண்டு, இரண்டாவது குறிக்கம்பு (Stump) ஊன்றப்பட்டது. அந்த இரண்டு கம்புகளுக்கும் இடைவெளி 2 அடியாக வைக்கப்பட்டது. கம்புகளின் உயரம் 1 அடி இருந்தது. அதன் தலைப்பாகத்தில் ஒரு குறுக்குக் குச்சியை வைத்து விட்டனர். அப்பொழுது அதன் அமைப்பு இப்படி 'n' இருந்தது.