பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


2. பந்தாடும் மட்டையின் பரிணாமம் (BAT)

கிரிக்கெட் ஆட்டம் திடீரென்று தோன்றிவிட்டதோர் ஆட்டமல்ல. கொஞ்சங் கொஞ்சமாக மலர்ந்து மக்களிடையே வளர்ந்து, மாறியே இந்த நிலையை அடைந்திருக்கிறது.

பந்தெறியாளரின் (Bowler) நோக்கமெல்லாம் பந்தெறிந்து விக்கெட்டினை வீழ்த்திடவேண்டும் என்பதுதான். பந்தடித்தாடுபவரின் (Batsman) முழுநோக்கமெல்லாம் பந்தெறியாளரின் நோக்கத்தை வீழ்த்தி, பந்தை அடித்து விரட்டி, "ஓட்டங்கள்" (Runs) எவ்வளவு முடியுமோ, அத்தனையையும் எடுத்துவிட வேண்டும் என்பது தான். அவ்வாறு எறிபவரை எதிர்த்து செயல்படும் என்பது தான். அவ்வாறு எறிபவரை எதிர்த்து செயல்படும் பந்தாடுபவர்களுக்கு உதவிடும் உற்ற சாதனமாக விளங்குவதுதான் இந்தப் பந்தாடும் மட்டையாகும்.

கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலத்தில் பந்தாடும் மட்டைக்கென்று எந்தவித வடிவமும் இல்லை. எந்தவித உருவமும் இல்லை. இப்படி அமைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை.ஆட விரும்பியவர்கள் தாங்கள் விரும்பியதற்கேற்றவாறு உருவாக்கிய மட்டைகளுடன் 'பிரசன்னமாகி' விளையாடிவிட்டுப் போய்விடுவார்கள் அவ்வளவுதான. ஏனென்று கேட்பாரில்லை.

தொடக்க நாட்களில், வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) பயன்படுத்தப்படும் ஆடுகோலைப் (Stick) போலவே, கிரிக்கெட் மட்டையும் தலைப்புறத்தில் வளைந்து நீண்ட கைப்பிடி உள்ளதாக அமைந்திருந்தது.

பிறகு, மரத்தாலான கனத்த மட்டைகள் ஆட்டக்காரர்களின் தேவைக்கேற்ப செய்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டன. உயரத்திற்கும் அந்த கதிதான் இருந்தது,