பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


3. பந்தும், பந்தெறி தவணையும் (Ball & Over)

கிரிக்கெட் ஆட்டமானது ஆரம்ப நாட்களில் கிராமப்புற மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு ஆட்டமாகத்தான் விளங்கி வந்தது. அப்பொழுது, இந்த ஆட்டத்திற்கென்று பந்து எதுவும் உருவாக்கப்படவில்லை.

உருண்டையான பொருள் அல்லது கோழி முட்டை வடிவமாக இருப்பதுபோல் உள்ள பொருள் எதுவாக இருந்தாலும், அதுவே ஆட்டத்திற்குரிய பந்தாக பயன்பட்டது என்று ஆரம்பகால வரலாறு கூறுகின்றது.

அதற்குப் பிறகு, சணல் அல்லது மயிர் நிறைக்கப் பெற்று தோலினால் தைக்கப்பட்டு செய்யப்பட்ட பந்துகள் தொடர்ந்து அந்நாட்களில் உதவி வந்தன.

கிரிக்கெட் பந்து உருவான நாட்களில், வெள்ளை நிறப் பந்தாகத்தான் அமைந்திருந்தது. அதுவுமின்றி, நீல நிறப் பந்துகளும் ஆட்டத்தில் பயன்பட்டு வந்தன. இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தைச் சேர்ந்த பென்ஷர் எனும் பகுதியைச் சேர்ந்த பிரபுக் குடும்பத்தினர், கிரிக்கெட் பந்து செய்தனர். ஏறத்தாழ அது 1561-ம் ஆண்டு என்று வரலாற்றுக் குறிப்பொன்று சுட்டிக் காட்டிச் செல்கின்றது.

நீல வண்ணப் பந்துகள் பெண்கள் ஆடும் கிரிக்கெட் ஆட்டத்திலும், வெள்ளை நிறப் பந்துகள் கிரிக்கெட் சங்கத்தினர் ஆடிய கிரிக்கெட் போட்டிகளிலும் இடம் பெற்று வந்தன. கிரிக்கெட் பந்தினை சிவப்பு வண்ணத்தில் தோய்த்துத் தயாரிக்கும் முறை முதன்முதலாக 1843-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.

1744ம் ஆண்டில் அமைந்த கிரிக்கெட் ஆட்ட விதியின்படி, பந்தின் கனமானது 5லிருந்து 6 அவுன்சுக்குள்ளாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த 1774ம்