பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


முதலில படிக்கத் தொடங்கினால், நாளாவட்டத்தில் வாய்மொழியில் பழக்கமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்மையாகிக் கொண்டு வருவதையும் நான் உணர்கிறேன்.

கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றைத்தான், கிரிக்கெட் ஆட்டத்தின் கதை என்ற பெயரில் எழுதியுள்ளேன். மிகவும் சிக்கலான வரலாறுதான். ஆங்காங்கே குழப்பங்களும், குறிப்புச் சிக்கல்களும் கிளைத்தெழுந்து என்னை கலக்கியிருக்கின்றன.

என்றாலும், முடிந்த அளவு, நீரோட்டம் போல நிகழ்ச்சிகளையும், வரலாற்றுக் குறிப்புக்களையும் வடிவமைத்து இங்கே தந்திருக்கிறேன்.

எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளவும், தொடர்ந்து ரசித்துப் படிக்கவும் ஏற்ற வகையில் சுவையாகவே எழுதிச் சென்றிருக்கிறேன். இன்னும் எவ்வாறு எழுதவேண்டும். எழுதினால் நன்றாக அமையும் என்று வாசகர்கள் எடுத்துரைத்தால், அக்கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். பின்பற்றுகிறேன்.

கிரிக்கெட் ஆட்டத்தின் தொடக்கம் சரிவரத் தெரியாவிட்டாலும், வளர்ச்சி ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகவே எழுதப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு முக்கியத் திறனும் எவ்வாறெல்லாம் காலத்தால் மாறி வந்தது, ஆட்டக்காரர்களால் மெருகேறி வந்தது என்கிற நிகழ்ச்சிகள் எல்லாம். நாவலில் வருகின்ற நிகழ்ச்சிகள் போலவே அமைந்து, நம்மை வியப்படையவும், திகைப்படையவும் செய்கின்றன.

ஆட்டத்தில் பங்கு பெற்றவர்கள், பொழுது போக்குக்காக, மகிழ்ச்சிக்காக மட்டும் ஆடாமல், இதை