பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


4. காலுறையும் கையுறையும்(Pads & Gloves)

கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தடி ஆட்டக்காராகப் (Batsman) பந்தாடும் இடம் நோக்கிப் (Pitch) போகின்ற ஒரு ஆட்டக்காரரைப் பார்த்தால், 'அலங்கார புருஷராக' அவர் இருப்பதை நாம் காணலாம். தலையிலே தொப்பி, உள்ளே மார்புக் கவசம், இன்னும் சற்றுக் கீழே இறங்கி வந்தால் அடிவயிற்றுக் காப்பான் (Abdominal Guard) கைகளை மூடிய கையுறை, அதற்குள்ளே மெல்லுறை, தொடை காக்கும் மெத்தை, முன்கால் காக்கும் காலுறை, தடித்த காலணிகள் இப்படியாக ஆடச் செல்லும் பாதுகாப்பு முறைகளும் ஒரே நாளில் கிரிக்கெட் ஆட்டத்தில் உருவாகி வந்து விடவில்லை. சரித்திர ஆசிரியர் விவரிப்பது போல், 'கிரிக்கெட் ஆட்டம் பிறக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வளர்ந்தது'. என்பதுதான் வரலாறு கூறும் உண்மையாகும். அதே தன்மையில்தான் கையுறைகளும், காலுறைகளும் ஆட்டத்தில் இடம் பெற்று, மெருகேறி இவ்வாறு உருப்பெற்று இருக்கின்றன. பந்தெறியும் (Bowling) வேகத்தை 1933-ம் ஆண்டில் இங்கிலாந்தில் கணக்கெடுத்தபோது, நாட்டிங்காம்ஷயர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஹரால்டு லார்வுட் (Harold larwood) என்னும் பந்தெறி வீச்சாளர், மணிக்கு 148.8 கிலோ மீட்டர் வேகத்தில் எறிந்தார் என்ற வரலாற்றுச் சாதனையை ஜே.எம்.ஜோடி (J.M. Jodey) என்பவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். - அவ்வளவு கடுமையான வேகவீச்சுப் பந்தை வெறுங்காலால் யாரால் பயமில்லாமல் தடுத்து ஆடுவதற்கு எதிரே நிற்க முடியும்? இம்மாதிரிப் பந்தினை வேகமாக