பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த H. டாபினி (H. Daubeny) என்பவர் நல்ல முறையான காலுறைகளைக் கண்டுபிடித்தார் என்ற புகழை சூடிக்கொண்டார், என்று 'விஸ்டன்' என்ற பத்திரிக்கை புகழாரம் சூட்டுகிறது. அதன் பிறகே, நல்ல முறையில் இலேசாக இருப்பது போலவும், மெத்தை நிறைந்ததாகவும், பல அளவுகளில் உள்ளது போலவும் அமைக்கப்பட்டு. இன்றைய ஆட்டத்தில் முக்கியமான ஒன்றாக காலுறைகள் கோலோச்சி வருகின்றன. கையுறைகள் : காலுறைகள் போலவே, கையுறைகளும் ஆட்டத்தில் இடம்பெறக் காரணமாயிருந்தது, கை சுற்றி வேகமாகப் போடும் பந்து வீச்சுதான். 1835ம் ஆண்டு பெலிக்ஸ் வானோ ஸ்டார்ட் (Felix Wanostrocht) என்பவர்தான் முதன் முதலாக கையுறைகள் (Gloves) தயாரித்துப் பயன்படுத்தினார் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். டேனியல் டே (Daniel Day) என்பவர்தான் விரைவுப் பந்து வீச்சின் வேகத்திற்கு ஈடாக, ரப்பர் குழாய்களால் ஆனக் கையுறைகளைத் தயார் செய்தார் என்று பலர் கூறினாலும், ஃபெலிக்ஸ் தான் முதலில் பயன்படுத்தினார் என்றே வரலாறு கூறுகிறது. ஃபெலிக்ஸ், குழந்தைகள் போட்டுக்கொள்கின்ற கையுறைகளில் சிறுசிறு ரப்பர்த் துண்டுகளை பதித்து 1835ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தினார் என்பதே அந்த வரலாற்றுக் குறிப்பு. அதன் பிறகு புதிய கையுறைகள் கனத்த மெத்தை அமைப்புடன், பந்தாட்டக்காரரின் விரல்களுக்குப் பாதுகாப்பாக தடித்த அளவில் செய்யப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட்டன. அஃதேபோல், விக்கெட் காப்பாளருக்கும், கையுறைகள் தேவை என்பதன் முடிவாக, 1848ம் ஆண்டு, டியூக்ஸ்