பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

63


கம்பெனியரால் தயாரித்தளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1850 ம் ஆண்டு, விக்கெட் காப்பாளருக்கு உட்கவசம் வேறு தயாரித்துத் தரப்பட்டது. அதுவே மெல்லிய பருத்தி நூலாலான உட்கையுைறைகளாக (Inner Gloves) மாறியது. ஆட்டத்தின் போது, அடிக்கடி நீரில் நனைக்கப்பட்டு ஈரமாகவே பயன்படுத்தப்படுகிறது.

அதற்குப் பிறகு, அடிவயிற்றுக் காப்பானும் காலப்போக்கில் ஆடுவோருக்கு அபயம் அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக ஒருபுறம் பந்துவீச்சில் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டு, எதிராட்டக்காரர் காக்கின்ற விக்கெட்டை வீழ்த்த முயற்சிகள் தொடர்ந்தபோது, மறுபுறம் விக்கெட்டைக் காத்து நிற்கவும், வேகமாக ஓடிவரும் பந்தை அடித்து விரட்டி ஒட்டமெடுக்கவும் மேற்கொண்ட முயற்சியில் தன் தேகத்தின் பாதுகாப்பிற்காகவும், தேவையான இடங்களுக்கெல்லாம் உறைகள் மாட்டி 'காப்பான்களாக' (Guards) மாற்றிக்கொண்டு ஆடினர்.

பார்ப்பதற்கு அழகாகக் காட்சி தருகின்ற காலுறைகள் கையுறைகள் வருவதற்குக் காரணமாயிருந்த பந்து வீச்சின் வளர்ச்சி பற்றி இனி காண்போம்.

5. பந்தெறி முறை (BOWLING)

கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தெறிவதும், எறிந்து வரும் பந்தை மட்டையால் அடித்து அனுப்புவதும் அடித்தாடிய பந்தைத் தடுத்தாடி விக்கெட்டைக் குறிபார்த்து எறிவதும் தான் முக்கியத் திறன் நுணுக்க முறைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த பந்தெறி முறை, எத்தனை முறை மாறி மாறி, எவ்வளவு தடவை சிக்கலுக்கும், சச்சரவுக்கும், பிரச்சினைகளுக்கும் ஆளாகி, ஆர்ப்பாட்டம் நிறைந்த விசுவரூபம் எடுத்து, விளையாட்டு