பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

65


என்பவர், அது போன்ற அரிய யோசனை எப்படித் தோன்றியது என்றால், கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வீட்டிலே கிரிக்கெட் ஆட்டத்தை ஜான்வில்லிஸ் விளையாடிப் பழகிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை கிறிஸ்டினா என்பவள், பந்தெறிந்து கொண்டிருந்தாள். கிறிஸ்டினா அணிந்திருந்த கவுன் கம்பி போன்றவற்றால் (Wire) சுற்றிலும் பின்னப்பட்டு, குடை ராட்டினம் போன்ற அமைப்பில் சுற்றளவில் விரிந்து இருநத்தால் (Crinoline). பந்தைக் கீழாகத் தூக்கி எறிய முடியாமல் கவுன் தடுத்தபோது, அவள் கையை வளைத்து பக்கவாட்டிலிருந்து தான் எறிய வேண்டியிருந்தது. அப்படித்தான் எறிய முடிந்தது. பந்தடித்துக் கொண்டிருந்த ஜான்வில்லிசுக்கு இது ஆச்சரியமாக இல்லாமல், இப்படி எறிந்து ஆடினால் என்ன? என்று எண்ணத் தோன்றியது. அதையே நன்கு பழகிக் கொண்டு, பல ஆண்டுகள் எறிந்தாடிக் கொண்டிருந்தார். ஆனால் 1822ம் ஆண்டில் நடந்த போட்டிகளில், ஜான் வில்லிஸ் புதுமாதிரியாக பந்து எறிந்தபோது,'முறையிலா பந்தெறி' (No Ball) என்று நடுவர்கள் கூறியதால், கோபமடைந்த ஜான் வில் லிஸ் மைதானத்தை விட்டே வெளியேறிவிட்டார். அவர் சென்ற விதத்தைக் கூற வந்த ஒரு சரித்திர ஆசிரியர், 'கோபமடைந்த ஜான், தன் குதிரைமீது ஏறிக்கொண்டு, வெளியேறினார். மைதானத்தை விட்டா அல்ல! கிரிக்கெட் சரித்திரத்தை விட்டே' என்கிறார். ஜான் வில்லிஸ் இறந்தபோது, அவரது கல்லறையில், ஆண்மை நிறைந்த ஆட்டத்தின் தாளாளர்போல் ஆடிய ஜான் வில்லிஸ், கைவளைத்து எறிகின்ற ஆட்டமுறையை முதன் முறையாகக் கண்டு பிடித்து ஆடினார்' என்று எழுதப்பட்டிருந்தது. ஜான் வில்லிஸ் வெளியேறினாலும், பந்தெறிமுறையை யாரும் தங்கள் நினைவிலிருந்து வெளியேற்றி விடவில்லை. 1827ம்