பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கிரிக்கெட் குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்தில், வளைந்த மட்டைகளுடன் (Curved bat) பந்தை அடித்தாடிய போது, விக்கெட் முன்னால் நின்று கொண்டிருந்த போது இந்தப் பிரச்சினை எழவே இல்லை. பந்தாடும் மட்டைகள் தங்கள் கூன் முதுகை தொலைத்து, நிமிர்ந்தவையாக மாறிய (Straight bat) போது, பிரச்சினைகளும் நிமிர்ந்து சிலிர்த்தெழுந்து கொண்டன. வளைந்த பந்தாடும் மட்டையுடன் விளையாடிய போது பந்தை அடித்தாடத்தான் முடியுமே தவிர, நன்றாக ஒதுக்கித் தடுத்து நிறுத்திட முடியாது என்பதால், விக்கெட்டைக் காத்துக் கொள்ளும் தந்திரம் அப்பொழுது முளையாகக் கூட முளைக்கவில்லை. நிமிர்ந்த, தட்டையான அடிபாகம் கொண்ட பந்தாடும் மட்டை வந்தவுடன், அடித்தாடாமல் தேக்கியாட ஆரம்பித்து, விக்கெட்டருகில் நின்று நெடுநேரம் ஆடக்கூடிய அளவுக்கு நுணுக்கம் வளர்ந்துவிட்டது. விக்கெட்டைக் காத்துக் கொள்ள முயன்றது தவறில்லை. பெருந்தன்மையுள்ள பண்பாளர்கள் ஆடுகின்ற ஆட்டம் என்று புகழப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தில், வஞ்சகமாக சூழ்ச்சியாக, பந்தைக் காலால் தேக்கியபடி தடுத்தாட ஒரு சிலர் அக்காலத்தில் தலைப்பட்டார்கள். காலுறைகள் (Pads) கண்டுபிடிக்கப்பட்டு, கால்களில் கட்டியிருந்ததும், அவர்கள் கால்களினால் பந்தைத் தேக்கிக்கொள்ளுதல் மிகவும் கஷ்டமில்லாமல் இருந்தது. நெஞ்சாரத் துணிந்து குறுக்கு வழியில் செல்லும் வஞ்ச மனத்தினராய் ஆடும் முறையினர் ஆட்டத்தைத் தடுக்கவே. 1774ம் ஆண்டு, ஒரு புதிய விதியை ஆட்ட வல்லுநர்கள் புகுத்தினார்கள்.