பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அப்புதிய நிலையானது, 1788-ம் ஆண்டு இருந்த, விக்கெட்டின் முன்னே பந்து விழுந்து, விக்கெட்டை நோக்கி வருகின்ற பந்தைக் காலால் தடுத்தால், தடுத்தவர் ஆட்டமிழக்க வேண்டும் என்ற விதியையே மீண்டும் சரியானதென்று 1839-ல் ஏற்றுக் கொள்ள வைத்தனர்.

இந்த விதியை ஏற்றுக்கொண்டு, எறத்தாழ 49 ஆண்டு காலம் விளையாடியபோது, மெரிலிபோன் கிரிக்கெட் சங்கத்தினர் (M.C.C.) மீண்டும் ஒரு முறை, இந்த விதியைப் பற்றி, ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இந்த சிந்தனையின் பயனாக, விதி மீண்டும் ஒரு திருத்தத்தைப் பெற்றுத் தாங்கிக் கொண்டது.

'பந்தெறியாளரிடமிருந்து எறியப்பட்டுவரும் பந்தை, பந்தடி மட்டையில் தடுக்காமல் வேண்டுமென்றே உடலால், (Person) அல்லது காலால் தடுத்து விக்கெட்டைக் காத்துக் கொண்டு ஆடுதல், ஆட்டத்தின் உண்மையான உணர்வுக்கும், நீதிக்கும் நியாயத்திற்கும் அப்பாற்பட்ட செயலாகும் என்று 1888ம் ஆண்டு விதிக்குப் புதிய வடிவத்தைத் தந்தனர். உணர்வையும் உண்மையான குறிக்கோளையும் மதித்தவர்கள் பண்புடனே ஆடத்தான் செய்தனர் என்றாலும், மாற்றம் பெற்ற விதி, முழுமையடையாமலே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

1902ம் ஆண்டு. மெரிலிபோன் கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், விதியை மாற்றியமைக்க முயன்று தோல்வி அடைந்தது. தோல்வியடைந்த சங்கத்தினரும் தொடர்ந்து பழைய விதியையே பின்பற்றி வந்தனர். அந்த இடைவெளி 35 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

இரண்டாண்டுகள் சோதனையாக விதியமைத்துக் கொண்டு வந்த விதியை, 1937ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். அதாவது, பந்தெறியாளர் எறிகின்ற