பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

77


தேர்ந்தெடுப்பது நடைமுறையில் இருந்து வரும் பழக்கமாகும். ஆனால், 1744ஆம் ஆண்டில் புதுவிதிகள் தோன்றுவதற்கு முன்னதாக, இன்னும் ஒரு புதிய பழக்கமும் நாணயம் சுண்டி எறியும்போது இருந்தது.

நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகின்ற குழுத் தலைவர், முன்னர் கூறிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், எந்த இடத்தில் விளையாடுவது என்று பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் பழக்கமும் இருந்தது. இரண்டு குழுக்கள் பொதுவான மைதானத்தில் ஆட நேரும் போது, இவ்வாறு உரிமையை அப்படித் தந்திருந்தார்கள்.

ஒரு குழு தனது சொந்த மைதானத்தில் ஆட நேர்ந்தால், விளையாட அங்கே வருகின்ற மற்றொரு குழுவிற்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை முதலிலேயே அளித்ததுமல்லாமல், எந்த இடத்தில் ஆடவேண்டும் என்று பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் கூட அளித்து வந்தார்கள். இப்படி செய்வதானது, விளையாட வருகின்ற குழுவிற்கு அதிகமான உரிமையைத் தருவதாக அமைந்து, இன்னொரு குழு இருக்கின்ற உரிமையையும் இழக்கும்படி ஆகின்றது என்பதாக அமைந்து, 1811ம் ஆண்டு. அந்த விதியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.

இரண்டில் ஒன்றைத் தோந்தெடுக்கும் உரிமையை இரண்டு குழுத் தலைவர்களுக்கும் விட்டுவிட்டுப், பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையானது நடுவர்களிடம் விடப்பட்டது. இந்த விதியும், தயாரிக்கப்பட்டு செப்பனிடப்பட்ட பந்தாடும் தரைக்கே பொருத்தமானதாக அமைந்தது.

அடுத்ததாக, பந்தாடும் தரையில் எல்லைக்கோடுகள் (Crease) அமைந்த விதம் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், கிரிக்கெட் ஆட்டம்