பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


உடை தேவையாக இருந்தது. என்னதான் விளையாடினாலும், குளிரிலிருந்து தப்பிப் போக முடியுமா!

அதனால், உடல் முழுவதையும் மூடி மறைக்கின்ற, குளிரிலிருந்து காத்துக்கொள்கின்ற முழுக்கால்சட்டை, முழுக்கை சட்டை, தலைக்குத் தொப்பி என்பதாக அணிந்து கொண்டு ஆடினார்கள்.

அடுத்தாக, ஆட்டத்தில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் பிரபுக் குடும்பத்தினர் அரச பரம்பரையினர் . வசதி படைத்தவர்கள், இவர்கள் எல்லோரும் எப்படி இருப்பார்கள்! வசதிக்காகத்தான் விளையாட்டே தவிர, விளையாட்டுக்காக வாழ்க்கை முறையை, வசதியை மாற்றிக் கொள்வார்களா! அவர்கள் அணிந்திருந்த உடையையே சற்று ஏற்றி இறக்கி, ஆடி மகிழ்ந்திருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

கிரிக்கெட் நன்கு வளர்கின்ற காலத்திலிருந்தே, ஆடைபற்றி அக்கறையை யாரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இயற்கையான அவர்களது முழுக்கால் சட்டை முழுக்கை சட்டை, தலைக்குத் தொப்பி என்பதாகவே அமைந்து விட்டிருந்தது.

அதன் பின்னர், ஆட்டத்தில் வளர்ச்சியும், மக்களிடையே ஆர்வமும் எழுச்சியும் பெற்றுக்கொண்டு, அந்த நிலையில் ஆட்டக்காரர்களின் ஆடைகள் சற்று மாற்றம் பெறத் தொடங்கின.

18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆடிய ஆட்டக்காரர் கள் மூன்று முனையாயிருக்கின்ற தலைத் தொப்பியை அணிந்திருந்தனர். அணிந்திருந்த சட்டைக்கு மேல், கையில்லாத வெள்ளைச் சட்டையை (Vest) போட்டுக்கொண்டு, போட்டிருந்த முழுக்கால் சட்டையில் முழங்கால் வரை 'ஸ்டாக்கிங்ஸ்' போட்டு இழுத்து, குதிரை